search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு தின அணிவகுப்பு"

    • 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

    குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதில், அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார். இது குறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

    அதில், "2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது.

    டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது.

    இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது. வதந்தியைப் பரப்பாதீர்!" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.

    குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதில், அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.

    அதன்படி, குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், கோவா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இடம்பெறவில்லை.

    தொடர்ந்து, 4வது ஆண்டாக இந்தாண்டும் டெல்லி மாநில அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது, பாஜக பழிவாங்கும் செயல் என அம்மாநில முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 மாதிரிகளை தமிழக அரசு வழங்கி இருந்தது.
    • கடந்த ஆண்டு தேர்வு செய்யப்படாத நிலையில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் கலந்துகொள்ள தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 மாதிரிகளை தமிழக அரசு வழங்கி இருந்தது. இதன்மூலம், தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ஆந்திரா, அசாம், குஜராத், அரியானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அணிவகுப்பு ஊர்திகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு தேர்வு செய்யப்படாத நிலையில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×