என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளம்பர பதாகைகள்"

    • தேசிய நெடுஞ்சாலை செல்வதால் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை நெடுஞ்சாலை துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும், மேலும் நகரின் மையப்பகுதியில் காவல் துறை அலுவலகங்கள், அரசுமருத்துவமனை, வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதியில் இந்த தேசிய நெடுஞ்சாலை செல்வதால் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

    மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாநில நெடுஞ்சாலைகள் இணைகின்றது. அதிக வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக பல்லடத்தில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது.

    வாகன ஓட்டிகள் கவனத்துடன் ஓட்டி விபத்துக்களை தவிர்க்கும் வண்ணம், பல்லடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முக்கிய ரோடுகளில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து விதிகளை பின்பற்றுவோம், வாகனத்தை முந்துவதில் கவனம் தேவை, ஹெல்மெட் அணிவோம் விபத்தை தவிர்ப்போம், செல்போன் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை நெடுஞ்சாலை துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

    ×