என் மலர்
நீங்கள் தேடியது "சப்-இன்ஸ்பெக்டர் மரணம்"
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஆசைத்தம்பி பணியாற்றி வந்தார்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆசைத்தம்பி இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஆசைத்தம்பி பணியாற்றி வந்தார். இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள போலீஸ் குடியி ருப்பில் வசித்து வந்தார். நேற்று இரவுஇவர் நெஞ்சுவலிக்கிறது என்று கூறி உள்ளார். அதன் பெயரில் அவர் குடும்பத்தி னர் அக்கம் பக்கத்தினர் அவரை உடனடி யாக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆசைத்தம்பி இறந்தார். இவரது சொந்த ஊர் வானூர் அருகே புதுப்பாளையம் கிராம மாகும். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.