என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புத்துணர்ச்சி"
- உடற்பயிற்சி செய்வதால் மனமும் வலிமை பெறுகிறது.
- உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி உதவுகிறது.
நமது அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், நம்மால் எந்த வேலைகளையும் செய்ய முடியும்.
உடற்பயிற்சி செய்வதால், நமது உடல் மட்டுமல்லாமல், மனமும் வலிமை பெறுகிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
கண்களுக்கான உடற்பயிற்சி
இரு உள்ளங்கைகளையும், இரு கண்கள் மீது வைத்து மூடி அழுத்திக் கொள்ள வேண்டும். பின் ஐந்து வினாடிகள் கழித்து கைகளை எடுத்து விட வேண்டும். இதுபோல் ஐந்து முதல் ஆறு முறை தொடர்ந்து செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் நனைத்த டவலைக் கொண்டு கண்களை மெதுவாக ஒற்றி எடுக்க வேண்டும். இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
காலுக்கான உடற்பயிற்சி
இப்பொது அதிகம் பேர் பிளாட் வீடுகளில் தான் குடியிருக்கின்றனர். மாடிப்படிகளில் தொடர்ந்து ஏறி இறங்குவதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, மாடிப்படிகளில் வேகமாக ஏறி இறங்கும் போது, முழங்கால்களுக்குள் காணப்படும் பிரச்சனைகளை நீக்கி, மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது. எனவே முடிந்த வரை படிகளின் வழியே ஏறி இறங்குங்கள். லிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுவது நல்லது. வயதான பெண்களுக்கு இது பொருந்தாது.
கழுத்திற்கான உடற்பயிற்சி
பெண்களின் கழுத்து பகுதி அழகுடன் திகழவும், கழுத்து எலும்புகளில் வலி ஏற்படாமல் இருக்கவும், இந்த பயிற்சி உதவுகிறது. நேராக நிமிர்ந்து தலையை மெதுவாக சுழற்ற வேண்டும். இதேபோல் வலது, இடது என மாறி மாறி கழுத்தை மெதுவாக சுழற்றும் போது கழுத்து தசைகள் வலுப்பெற்று நல்ல வனப்புடன் அழகாக இருக்கும்.
சோம்பேறித்தனம்
இன்று நாம் கடைக்கு சென்று கூட பொருள் வாங்க வேண்டாம். ஏனென்றால் அனைத்து பொருட்களுக்கும் டோர் டெலிவரி ஆகிவிடுகிறது. நமது உடலுக்கு வேலையை கிடையாது. இது நமது வாழ்வில் மிகப்பெரிய சோம்பேறித்தனத்தை உண்டாக்குகிறது. சோம்பேறித்தனத்தை சரி செய்ய தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம், சோம்பேறித்தனம் மற்றும் சோர்வு ஆகியவற்றை முறித்து புத்துணர்வு பெற முடியும்.
தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும். அதனால் ஒரு நாளைக்கு தினசரி சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் பணி புரிந்து வருகின்றனர். வீட்டில் உள்ள பணிகள் மற்றும் அலுவலக பணிகள் என அனைத்திலும் உள்ள பெண்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்க்கு நேரம் கிடைப்பது இல்லை. ஆனால் அனைத்து பணிகளையும் செய்வதற்கு, நமது உடல் ஆரோக்கியம் அவசியமான ஒன்று. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று.
நாம் செய்யும் வேலைகளை எவ்வளவு அவசியமானதாக கருதுகிறோமோ, அதுபோல பெண்கள் உடற்பயிற்சி செய்வதும் அவசியமான ஒன்று. உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் வலி, அசதி, மற்றும் உடலில் தேங்கி உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைக்க உதவுகிறது.
- பெண்கள் அனைத்து நிலைகளிலும் மேம்பட்டு வருகின்றனர்.
- தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபட உந்துதலாக அமையும்.
வளர்ந்து வரும் நாடுகளில் பெண்கள் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றனர். எனினும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சுயசார்பு நிலையை அடையாமலே இருக்கிறார்கள். இன்றைய இளம்பெண்களில் பலர், குடும்பத்தினர் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும், தங்களது சுயசார்பு மற்றும் சுதந்திரத்துக்கும் இடையில் குழம்பிய நிலையிலேயே உள்ளனர்.
தாங்கள் நினைத்ததை, பிறரை சார்ந்து இல்லாமல் சரியான தருணத்தில் தாமாகவே செய்து கொள்ளும் தன்னிச்சையே சுயசார்பு. தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்குக் கூட பிறரின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பது தவறு. இது நம் முன்னேற்றத்தை முடக்கும்.
இல்லத்தரசிகள் முதல் விண்ணை நோக்கி பயணிக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் சுயசார்பு அவசியம். இது மனதுக்கு புத்துணர்வு அளித்து, முழுமையான தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபட உந்துதலாக அமையும். இப்பாதையில் பயணிக்கும் பெண்களுக்கு தானாகவே தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். இந்த தன்னம்பிக்கை அவர்களின் சிறுசிறு மகிழ்ச்சிக்கும் சிறகுகளை அளித்து உயர பறக்க வழி வகுக்கும்.
- நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை தரும்.
- உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும்.
கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல் குடும்ப தலைவிகள், பணிபுரியும் பெண்கள் எனப் பலருக்கும் நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. இளம் பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை 40 வயதை கடந்தவர்களுக்குத்தான் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள், சுவாசப்பிரச்சினைகள், உடல் பருமன் ஆகியவை ஏற்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் 25 வயதானவர்களுக்கே இத்தகைய பிரச்சினைகள் வருகின்றன. இளம் பெண்களிடமும் தற்போது நீச்சல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
நீச்சல் பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. நீச்சல் பயிற்சி உடல் பருமனை குறைக்கும். நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தும். 1 மணி நேரம் நீந்தினால் 500 முதல் 800 கலோரிகள் எரிக்கப்படும். உடலின் எல்லா பாகங்களும் வலுப்பெறும். காலி வயிற்றுடனோ, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டோ நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது.
நீந்தும் முன், தகுதி பெற்ற பயிற்சியாளரும், தகுதி பெற்ற மீட்பாளர்களும் நீச்சல் குளத்தில் இருக்க வேண்டும். நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர், சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட வேண்டும். குளோரின் கலந்த நீர் சருமத்தில் படுவதால் நிறம் மாறும்.
இதைத் தவிர்க்க நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு 1 மணிநேரத்துக்கு முன்பாக உடலில் வைட்டமின்-ஏ, இ ஆகியவை அடங்கிய கிரீம்களை பூசிக்கொள்ளலாம். இதனால் சருமம் பாதிக்கப்படாது.
- இரவில் தூங்க செல்லும் நேரம் முக்கியமானது.
- காலையில் கண் விழித்ததும் செல்போன் பார்க்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
காலை வேளையில் உடலும், மனதும் புத்துணர்ச்சியுடன் இருந்தால்தான் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமான மனநிலையில் செயல்பட முடியும். படுக்கையை விட்டு எழும்போது சில விஷயங்களை தவிர்ப்பது காலைப்பொழுதை இனிமையானதாக மாற்றும். அவை....
தூக்க சுழற்சி:
அலாரம் அடிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண் விழிக்கும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதற்கு இரவில் தூங்கச்செல்லும் நேரம் முக்கியமானது. குறிப்பிட்ட நேரத்திற்குள் தூங்கச் சென்று மறுநாள் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கும் வழக்கத்தை ஒரு வாரம் வரை தொடர்ந்து பின்பற்றி வந்தால் இயல்பாகவே உடல் அத்தகைய தூக்க சுழற்சிக்கு பழக்கப்பட்டுவிடும். அலாரம் அடிப்பதற்கு முன்பு எழுவதற்கு பழகிவிடுவீர்கள்.
ஆரம்பத்தில் சிலர் அலாரம் அடித்ததும்தான் எழுவதற்கு முயற்சிப்பார்கள். அப்போது மறு அலாரம் அடிக்கும் வரை காலம் தாழ்த்தாமல் உடனே படுக்கையைவிட்டு எழுந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் உடலில் சோர்வு குடிகொண்டு விடும். அன்றைய நாளை கடினமாக உணர வைக்கும்.
செல்போன் பார்ப்பது:
காலையில் கண் விழித்ததும் செல்போன் பார்க்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். உறக்க நிலையில் இருந்து விழிக்கும் கண்கள் மீது செல்போன் வெளிச்சம்படுவது கண் சோர்வுக்கு வித்திடும். சிலர் படுக்கையில் செல்போனை பார்க்கத்தொடங்கினால் எழுந்திருக்க மனமில்லாமல் அதிலேயே மூழ்கிப்போய்விடுவார்கள். அது அன்றைய நாளினை உற்சாகமாக தொடங்கும் மனநிலையை சிதைத்துவிடும். ஒருவித மன அழுத்தம் ஆட்கொள்ள தொடங்கிவிடும். கவனச் சிதறலுக்கு வழிவகுத்து அன்றைய நாளின் திட்டமிடுதலுக்கு இடையூறாக அமைந்துவிடும்.
காலை உணவை தவிர்ப்பது:
காலை உணவுதான் அன்றைய நாளின் முக்கியமான உணவாக கருதப்படுகிறது. இரவு முழுவதும் வெறுமையுடன் இருக்கும் உடலுக்கு ஆற்றலை கொடுக்கும் சக்தி காலை உணவில் இருக்கிறது. அதைத் தவிர்ப்பது உடலை பலவீனப்படுத்திவிடும். கவனக் குறைபாட்டுக்கு வழிவகுக்கும். மதிய உணவுக்கு முன்பு நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிட வைத்துவிடும். மதிய உணவையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.
அவசரமாக புறப்படுவது:
காலையில் தாமதமாக கண் விழிப்பவர்கள் அவசர அவசரமாக புறப்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள். நிதானமின்றி அவசர கதியில் செயல்படுவார்கள். அப்படி அவசரமாக அன்றைய நாளை தொடங்குவது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடும். மனச்சோர்வுக்கும் வித்திடும். காலை வேளையில் மனம் அமைதியான சூழலை உணர வேண்டும். காலை நேர பழக்க வழக்கங்களை நிதானமுடன் செய்ய வேண்டும். முன்கூட்டியே எழுந்திருக்க பழகிவிட்டால் கடைசி நேர அவசரத்தை தவிர்க்கலாம்.
காபி பருகுவது:
காலையில் எழுந்ததும் காபி பருகும் வழக்கத்தை தவிர்க்க வேண்டும். அதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது இதயத்துடிப்பு அதிகரிக்க வழிவகுக்கும். உடல் நடுக்கத்திற்கும் வித்திடும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் பருகுவதுதான் நல்லது. அதன் பிறகு காபி குறைவாக பருகலாம்.
- புதிய கல்வியாண்டு 2023-24 ஜூன் 12-ந் தேதி முதல் துவங்குகிறது.
- வகுப்புகள் துவங்கியதும், மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
உடுமலை :
புதிய கல்வியாண்டு 2023-24 ஜூன் 12-ந்தேதி முதல் துவங்குகிறது. மாணவர்களை வரவேற்க வழக்கமாக முதல் சில நாட்களுக்கு பாடங்கள் நடத்துவதற்கு மாற்றாக விளையாட்டுப்போட்டிகள் நடத்துவதும், கதைகள் கூறுவதுமாக துவக்கப்பள்ளிகளில் செயல்முறைகள் மேற்கொள்ளப்படும்.நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் துவங்கியதும், மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:- கல்வியாண்டு துவங்கியதும் முதல் 2 வாரங்கள் வரையிலும் அவர்களின் முந்தைய வகுப்பு பாடங்களை நினைவு கூர்ந்து அதற்கான செயல்முறைகளை எளிமையாக நடத்துவதற்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. புதிய பாடங்களை திடீரென நடத்தினால் மாணவர்களுக்கு கடினமாக இருப்பதால் இவ்வாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
- பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.
- உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல் முன்னிலை வகித்தனர்.
பல்லடம் :
பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ப்ளூபேர்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தாளாளர் ராமசாமி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி பேசுகையில்,போதை பொருட்களால் உடல் நலம், மனநலம் கெடுவதுடன், சமூக மரியாதையும் குறையும்.வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும்.பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.
மாணவர்களின் லட்சியம் கல்வியில் மட்டும் இருந்தால் சிறந்த பதவிகளுக்கு வர முடியும். உங்களது பெற்றோர்கள், உறவினர்கள் போதை பழக்கத்தில் இருந்தால், அவர்களை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்க முடியும். மேலும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து உங்களுக்குத் தெரிந்தால், பெற்றோர்கள் மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்.
மேலும் செல்போன், வீடியோ கேம் போன்ற எலக்ட்ரானிக் விளையாட்டுகளில் ஈடுபடுவதை தவிர்த்து, ஓடியாடி விளையாடுவதே உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில்,வழக்கறிஞர்கள், பள்ளி முதல்வர் ஹேமலதா மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்