என் மலர்
நீங்கள் தேடியது "136 அடியாக குறைந்த பெரியாறு அணை நீர்மட்டம்"
- பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணை யின் நீர்மட்டம் 136.60 அடியாக சரிந்துள்ளது.
- 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்ம ட்டம் வேகமாக சரிந்து 50.69 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமை ந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இங்கு இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கு கிறது.
152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறு த்தியது. அதன்படி கடந்த பருவமழையின்போதும் 142 அடி வரை தண்ணீர் தேக்க ப்பட்டது. அதன்பின்னர் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணை யின் நீர்மட்டம் 136.60 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு 239 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1867 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்ம ட்டம் வேகமாக சரிந்து 50.69 அடியாக உள்ளது. நேற்று பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இன்று காலை முதல் மீண்டும் பாசனத்திற்கு 900 கனஅடிநீர் மற்றும் குடி நீருக்கு 69 கனஅடிநீர் என மொத்தம் 969 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.80 அடியாக உள்ளது. 31 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.08 அடியாக உள்ளது. 12 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.