என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூபாய் நோட்டு நூல்"

    • அரவிந்த் மாயராம் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.
    • அரவிந்த் மாயராம் தற்போது ராஜஸ்தான் முதல்-மந்திரியின் பொருளாதார ஆலோசகராக இருக்கிறார்.

    புதுடெல்லி:

    மத்திய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிதித்துறை செயலாளராக இருந்தவர் அரவிந்த் மாயராம். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார்.

    காங்கிரஸ் ஆட்சியின்போது ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதற்காக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு நூல் சப்ளை செய்வதற்காக இங்கிலாந்தை சேர்ந்த டிலாரு இண்டர் நேஷனல் என்ற நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.

    காலாவதியான அந்த ஒப்பந்தத்தை உரிய அனுமதிதியின்றி சட்டவிரோதமாக 3 ஆண்டுகள் நீட்டித்ததாக அரவிந்த் மாயராம் மீது புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் அவர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் அரவிந்த் மாயராம் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அவரது வீடுகளில் இந்த சோதனை நடந்தது.

    அரவிந்த் மாயராம் தற்போது ராஜஸ்தான் முதல்-மந்திரியின் பொருளாதார ஆலோசகராக இருக்கிறார். அவர் சமீபத்தில் ராகுல்காந்தியின் பாதயாத்திரையிலும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    ×