என் மலர்
நீங்கள் தேடியது "புதுப்பட்டினம் ஊராட்சி"
- பெண்கள் பொங்கலிட்டு, கும்மியடித்து பாட்டுப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
- சுகாதாரம், சுற்றுச்சூழல், புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம், புதுப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் முன்னிலையில் நடைபெற்றது. பெண்கள் பொங்கலிட்டு, கும்மியடித்து பாட்டுப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
சுகாதாரம், சுற்றுச்சூழல், புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. தூய்மை பணியாளர்கள் 50 நபர்களுக்கு புத்தாடைகள், பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ தனபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.