search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தகம் - தொல்லியல் கண்காட்சி"

    • நம்ம ஊரு நம்ம விழா 16ஆம் ஆண்டு விழாவாக நடைபெற்றது.
    • உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விழாவினை வாழ்த்தி பேசினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சார்பாக விழுப்புரம் மருதம் அமைப்பின் சார்பில் நம்ம ஊரு நம்ம விழா 16ஆம் ஆண்டு விழாவாக நடைபெற்றது. கடந்த 14 -ந்தேதி மாலை விழுப்புரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாலை 4 மணி அளவில் புத்தகக் கண்காட்சி மற்றும் தொல்லியல் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது இந்த நிகழ்வில் எழுத்தாளர் ஜோதி நரசிம்மன், கவிஞர் ஜெயச்சந்திரன், பேராசிரியர் த.பழமலை, ஆய்வாளர் சி வீரராகவன், எழுத்தாளர் செங்குட்டுவன், முனைவர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் நேற்று மாலை விழுப்புரம் மண்ணின் மைந்தர்கள் குழுவின் சார்பில் இசையமுழக்கம் மற்றும் திருவடுகூர் கைலாய வாத்திய குழுவினரின் இசைப்பொழிவு உள்ளிட்ட நிகழ்வுகளுடன் நிகழ்ச்சிதொடங்கியது. இந்த நிகழ்விற்கு எழுத்தாளர் இரா ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பல் சுவை நிகழ்வுகள் நடைபெற்றது தமிழர் பண்பாட்டில் முருகு என்கிற தலைப்பில் பாவலர் அறிவுமதி உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விழாவினை வாழ்த்தி பேசினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி,டாக்டர் லட்சு மணன், நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் தலைமை யில் தமிழுக்கு பெருமை அடிப்பது சங்க காலமே சமகா லமே என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடை பெற்றது மருதம் ஒருங்கி ணைப்பாளர் ரவி கார்த்தி கேயன் விழாவினை ஒருங்கிணைத்தார்.

    ×