search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹஜ்"

    • ஆணையத்தின் செயலி மற்றும் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • நடப்பு ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் இருந்து சுமார் 18 லட்சம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.

    அபுதாபி:

    அமீரக இஸ்லாமிய விவகாரத்துறை பொது ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் செல்ல விரும்புவார்கள். அமீரகத்தை சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு (2025) புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் 12 வயதை அடைந்தவராகவும், கடந்த 5 ஆண்டுகளில் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளாதவராகவும் இருக்க வேண்டும்.

    முதல் முறையாக ஹஜ் பயணம் செய்ய இருப்பவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக ஆணையத்தின் செயலி மற்றும் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள அடுத்த ஆண்டு அமீரகத்தை சேர்ந்த 6 ஆயிரத்து 228 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் இருந்து சுமார் 18 லட்சம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் முதல் மாநிலமாக வரும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.
    • கடந்த வருடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 20 ரூபாய் வாங்கினேன்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்ப் பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபு பக்கர் கூறியதாவது:-

    "தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் முதல் மாநிலமாக வரும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. பொங்கல் அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் 10 ரூபாய் வாங்கி இருக்கிறேன். கடந்த வருடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 20 ரூபாய் வாங்கினேன். இந்த வருடம் 100 ரூபாய் வாங்கியது மகிழ்ச்சி.

    இந்த வருடம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். சென்னையில் இருந்து அனைத்து விமானங்களும் ஹஜ் பயணத்திற்கு இயக்கப்படும். இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லை" என்றார்.

    ×