என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "தமிழ்நாடு ஆளுநர்"
- தமிழ்நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் இதயத்தில் வாழ்கிறார்கள்.
- பிரதமரின் தலைமையில் நாடும், மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
நரேந்திர மோடி இன்று 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்கள் சார்பில் வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/06/09/2559931-modi6.webp)
இதுகுறித்து ராஜ் பவன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் மகிழ்ச்சிகரமான சகோதர, சகோதரிகள் தங்களின் அன்புத் தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடிக்கு மனமார்ந்த, அன்பான மற்றும் சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வறுமையற்ற, பிணியில்லாத, கல்வியறிவின்மை போக்க, வீடற்றவர்கள் நிலை மாற மற்றும் பாகுபாடுகள் இல்லாத வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்புவதற்காக நரேந்திர மோடி தனது 3வது ஆட்சிப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரதமருக்கு நாடு முழுவதும் ஒரே குடும்பம் என்பதும், தமிழ்நாட்டு மக்கள் அவரது இதயத்தில் வாழ்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். தமிழ் மக்கள் அவரை நேசிக்கிறார்கள்.
தங்களின் இதயத்தில் பிரதமர் வாழ்கிறார் என்பதை அவர் அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். பிரதமரின் தலைமையில் நாடும், மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் அறிவார்கள்.
கடவுள் அவருக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளைக் கொடுத்து, தேசத்தின் நலனுக்கான அவரது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை வழங்கட்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் குடியரசுத் தலைவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
- டெல்லி செல்லும் கவர்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஆலோசனை.
தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது.
கடந்த 12ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த திமுக குழு, 20 நிமிடங்கள் அவருடன் பேசியது.
பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் குடியரசுத் தலைவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதே போன்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மீண்டும் 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார். டெல்லி செல்லும் கவர்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.