என் மலர்
நீங்கள் தேடியது "ஷூப்மான் கில்"
- ஐதராபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
- ஷூப்மான் கில்லுடன் இணைந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷூப்மன் கில், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். கேப்டன் ரோகித் 34 ரன்களில் வெளியேறினார்.
அதன்பின்னர் ஷூப்மான் கில்லுடன் இணைந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். சூரியகுமார் யாதவ் 31 ரன், ஹர்திக் பாண்ட்யா 28 ரன், வாஷிங்டன் சுந்தர் 12 ரன் சேர்த்தனர். மறுமுனையில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷூப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். 145 பந்துகளில் 19 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். ஹாட்ரிக் சிக்சர் அடித்து இரட்டை சதத்தை நிறைவு செய்தபோது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை ஷூப்மன் கில் பெற்றுள்ளார்.