search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ஜெய்சங்கர்"

    • அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் போர் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
    • போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது.

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்ற 19வது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது, "அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் போர் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. காசாவில் தற்போது நிலவிவரும், மோதல்களைப் பற்றி நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தையும், பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

    மேலும், அனைத்து நாடுகளும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான எல்லைக்குள் வாழவேண்டும். அதே வேளையில், இரு நாடுகளிலும் அமைதி நிலவுவதற்கான தீர்வை நாம் தேட வேண்டும். நமது கூட்டு முயற்சியின் மூலம் சுமூகமான தீர்வு எட்ட வேண்டும்" எனக் கூறினார்.

    • இந்தியா, இலங்கையின் பல்வேறு கட்டமைப்பு திட்டங்களில் நிதி உதவி வழங்கியுள்ளது.
    • ஜெய்சங்கரின் வருகையை பாராளுமன்றத்தில் இலங்கை அதிபர் விக்ரமசிங்கே அறிவித்தார்.

    கொழும்பு :

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு செல்கிறார். அவர் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பெறுகிறார்.

    ஜெய்சங்கரின் வருகையை பாராளுமன்றத்தில் இலங்கை அதிபர் விக்ரமசிங்கே அறிவித்தார். 'இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளில் வெற்றிகரமான நடவடிக்கையாக அவரது வருகை இருக்கப்போகிறது' என்று அவர் அறிவித்தார்.

    இலங்கையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்த்தனா மற்றும் இலங்கையின் வெளியுறவு மந்திரி அலி சப்ரி ஆகியோரை சந்திக்கிறார்.

    சர்வதேச பண நிதியம், இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் தொகையை கடனாக வழங்க, இந்தியா, சீனா மற்றும் ஜப்பானின் உத்தரவாதத்தை கேட்கிறது. எனவே, இந்திய வெளியுறவு மந்திரியின் வருகையானது இந்த கடன் உத்தரவாதத்தில் வெற்றிகரமான முடிவெடுக்க உதவும் என்று இலங்கை எதிர்பார்க்கிறது.

    ஏற்கனவே இந்தியா, இலங்கையின் பல்வேறு கட்டமைப்பு திட்டங்களில் நிதி உதவி வழங்கியுள்ளது. தற்போது பொருளாதார மந்தநிலை நீடித்து வரும்நிலையில் சர்வதேச பண நிதியத்தின் 2.9 பில்லியன் டாலர் தொகையை பெறுவதிலும் இந்தியா இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்று அண்டை நாடான இலங்கை நம்புகிறது.

    ×