search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனவர் சஸ்பெண்டு"

    • பொங்கல் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • வனத்துறையினர் ராஜேஷ்குமாரிடம் இருந்து, ரூ.35 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    வடவள்ளி:

    கோவை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக கோவை குற்றாலம் உள்ளது.

    இங்கு வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து மகிழ்ந்து செல்வர்.

    பொங்கல் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கோவை குற்றாலத்திற்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60, சிறியவர்களுக்கு ரூ.30, இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.20, காருக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டு வனத்துறை சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் டிக்கெட் வழங்கும் இடத்தில், பல்வேறு மோசடிகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கோவை குற்றாலத்திற்கு அதிகமாக பயணிகள் கூட்டம் வருகிறது. ஆனால் அரசுக்கு வரும் எண்ணிக்கை கணக்கானது மிக குறைவாக இருக்கிறது.

    இதனால் வனச்சரகர் சுசீந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரகசியமாக ஆய்வு மேற்கொண்டு வந்தார். அப்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.

    நுழைவு சீட்டு வழங்குமிடத்தில் 2 மிஷின்கள் உள்ளன. இதில் 2 மிஷின்களிலும் டிக்கெட்டை அச்சிட்டு பணத்தை பெற்று வருகின்றனர். ஆனால் இதில் ஒரு மிஷினில் மட்டுமே முறையாக அரசாங்கத்திற்கு செல்லும் வகையில் பதிவு செய்யப்படுகிறது.

    மற்றொரு மிஷின் மூலம் அச்சடிக்கப்படுவது போலி டிக்கெட் என்றும், மேலும் அந்த பணம் அரசாங்கத்திற்கு செல்லாமல் சீட்டு கொடுப்பவர்களே வைத்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து இந்த மோசடியில் ஈடுபடுவர்கள் யார்? என்பதை கண்டறிய வனசரகர் சுசீந்திரன் அங்குள்ள வன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில், நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில் பணியாற்றி வரும் வனவரான ராஜேஷ்குமார்(36) தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, போளுவாம்பட்டி வனசரகராக முன்பு பணியாற்றி தற்போது ராமநாதபுரத்தில் பணியாற்றி வரும் ஒருவர் அறிவுறுத்தலின் பேரில் தான் இதனை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து வனத்துறையினர் ராஜேஷ்குமாரிடம் இருந்து, ரூ.35 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே வனவர் ராஜேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் பணியாற்றி வரும் நபரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×