என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆட்குறைப்பு"
- முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 136 சதவீதம் அதிகம்.
- போட்டியை எதிர்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க கார்ப்பரேட்களில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் Nike, 2024 ஆண்டை ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் துவங்கியுள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் 82 ஆயிரத்து 307 பேரை பணிநீ்கம் செய்வதாக அறிவித்து இருந்தது. இது அதற்கும் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 136 சதவீதம் அதிகம் ஆகும். இதோடு 2009 நிதி நெருக்கடி துவங்கியதில் இருந்து ஜனவரி மாத வாக்கில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பணிநீக்க நடவடிக்கையாக அமைந்தது.
பெருந்தொற்று காலக்கட்டத்தில் அதிகளவில் ஆட்களை பணியமர்த்தியது மற்றும் வேறு பிரிவுகளில் முதலீடு செய்வது உள்ளிட்டவைகளை பணிநீக்கத்திற்கு காரணமாக Nike நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் Nike Inc. நிறுவனம் 2 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது. பணிநீக்கத்தால் செலவீனங்களை குறைப்பதன் மூலம் சரிந்து வரும் விற்பனை மற்றும் போட்டியை எதிர்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த முறை ஆட்குறைப்பு நடவடிக்கையில் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- பல "ஸ்டார்ட் அப்" நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டன
- பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2022-ஐ விட 2023ல் அதிகம்
2022 வருட பிற்பகுதியில் அமெரிக்காவில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பணியாளர்களை கூட்டம் கூட்டமாக பணிநீக்கம் செய்யும் "லே ஆஃப்" (layoff) நடைமுறை தொடங்கியது.
இவ்வருடமும் அந்த நடைமுறை தொடர்வதுடன் பணிநீக்கங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், யாஹு, மெடா மற்றும் ஜூம் உள்ளிட்ட பல மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி "ஸ்டார்ட் அப்" நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.
பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு மாற்றி வரும் சூழல், குறைந்து வரும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை, பணியாளர்களின் திறன் வளர்த்தல் குறைபாடு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை, ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு செலவினங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் லே ஆஃப் நடப்பதாக கூறப்பட்டு வருகிறது.
பணியை இழந்தவர்களுக்கு வேறு இடங்களில் வேலை கிடைப்பது குதிரை கொம்பாகி வருகிறது.
அமெரிக்காவில் ஹெச்1-பி விசா முறையில் பணிக்காக சென்றவர்கள் பணியில்லாமல் சில மாதங்களே வசிக்க முடியும். வேறு வேலை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும். இச்சூழலில் வேலை இழந்தவர்கள் மாற்று வேலையை தேடி வருகிறார்கள்.
கடந்த டிசம்பர் 21 வரை 2,24,503 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த 2022 ஆண்டு எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பொருளாதார மந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டும் இது தொடரலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- இன்று நாம் வேறுபட்ட பொருளாதார யதார்த்தத்தை எதிர்கொண்டு வருகிறோம்.
- முன்னதாக 11,000 பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது.
மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்ய உள்ளது. தொடர்ந்து ஏற்பட்டு வரும் வர்த்தக சரிவு காரணமாக, உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
இந்த ஆட்குறைப்பு தொடர்பாக தனது பணியாளர்களுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில், "கடினமான செய்திகளை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் தோராயமாக 12,000 பேரை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளோம். கடுமையான ஆய்வுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உறுதியுடன் கடினமாக உழைத்து, பணியமர்த்த விரும்பி, அதீத திறமை வாய்ந்த சிலரிடம் இருந்து விடை பெறுகிறோம். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். பணியாளர்களின் வாழ்க்கையில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என்னைப் பெரிதும் பாதிக்கிறது. இதற்கான, முழுப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டோம். இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில், பணியமர்த்தம் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இன்று நாம் வேறுபட்ட பொருளாதார யதார்த்தத்தை எதிர்கொண்டு வருகிறோம்.
இருப்பினும், நமது வலுவான கட்டமைப்பு, தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மதிப்பு, செயற்கை நுண்ணறிவு துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக மைக்ரோசாப்ட் 11000 பணியாளர்களையும், அமேசான் 18000 பணியாளர்களையும், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11000 பணியாளர்களையும் நீக்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்