search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம சபைக் கூட்டம்"

    • தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 2ந் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் கிராம ஊராட்சி மன்றத் தலைவரால் நடத்தப்பட உள்ளது.
    • அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் காந்திஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2ந் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் கிராம ஊராட்சி மன்றத் தலைவரால் நடத்தப்பட உள்ளது.

    இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்,

    காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகியவை குறித்தும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், 2023-24 ஆம் ஆண்டுக்கான சமூகத் தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதர தலைப்புகளிலும் விவாதங்கள் நடைபெற உள்ளது.

    மேலும் 130 கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வகையில் கிராம சபைக் கூட்டத்தை நடத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
    • பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான வரும் 15-ந் தேதியன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம், ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

    சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2023 முதல் 31.07.2023 முடிய) செலவின அறிக்கை குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல்,

    தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்த விவரத்தை முன்வைத்தல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விவாதித்தல், ஜல்ஜீவன் இயக்கத்தில் பணிகள் குறித்த விவரத்தினை உறுதி செய்தல்,

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட 2022-23 மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான பணிகள் குறித்து விவாதித்தல் மற்றும் இத்திட்டத்தில் வேலை அட்டைகள் வழங்கியதை உறுதி செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொ ருட்கள் விவாதிக்கப்படும்.

    அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    • 251 கிராம ஊராட்சிகளில் தொழி லாளர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது இடத்தில் நேற்று நடைபெற்றது.
    • இலளிகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் தொழி லாளர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது இடத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றியத்தால் நியமிக்க ப்பட்ட பார்வையாளர் கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

    இதையடுத்து நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இலளிகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், இலளிகம் கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொதுசெலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம் (VPDP) , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும், இக்கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தலைமையேற்று எங்கள் கிராமம்! எழில்மிகு கிராமம்!! என்ற உறுதிமொழியினை வாசிக்க ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்கா ளர்கள், பொதுமக்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாலா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பத்ஹி முகமது நசீர், துணை ஆட்சியர் பயிற்சி செந்தில் குமார்,நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் புனிதம் பழனிசாமி, இலளிகம் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா மாதேஷ்குமார், துணைத் தலைவர் கிருஷ்ணன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கண்ணன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், தாட்கோ மாவட்ட மேலாளர் சிட்டிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாத்தூர் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வி
    • ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மாத்தூர் ஊராட்சியில் மே தினத்தையெட்டி கிராம சபைக் கூட்டம் தலைவர் லட்சுமி பாபு தலைமையில் நடந்தது.

    துணைத் தலைவர் கமலக்கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் பேசியதாவது:-

    நமது ஊராட்சிக்கு செய்யாற்று குடிநீர் கொண்டு வர கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இடையில் கூடுதல் செலவாக 50 லட்சம் ரூபாயும் ஒதுக்கபட்டது.

    ஆனால் இவ்வளவு நிதி ஒதுக்கியும் மாத்தூருக்கு குடிநீர் மட்டும் வரவில்லை. என, கேள்வி எழுப்பினர்.

    இங்கு கிராம சபை கூட்டத்திற்கு வந்திருக்கும் அதிகாரியே பதில் சொல்லலாமே.

    மேலும் காலம் தாழ்த்தாமல் செய்யாற்று குடிநீரை மாத்தூருக்கு கொண்டு வர போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    செய்யாற்று குடிநீர் கொண்டு வந்ததற்காக மாங்கால் கூட்ரோட்டில் கட்டப்பட்டுள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டியும், மாத்தூரில் அமைக்கப்பட்டுள்ள தரைதள நீர்தேக்க தொட்டியும் வீணாகித் தான் கிடக்கிறது.

    கடந்த முறை நடந்த கிராம சபைக் கூட்டத்திலும் செய்யாற்று குடிநீர் திட்டத்தைப் பற்றியே முன் வைத்தோம் ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

    அதிகாரிகளான நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என, சரமரியான கேள்வியை எழுப்பினர். இதனால் கிராம சபையில் பதட்டமான சூழ் நிலை ஏற்பட்டது.

    கிணற்றேரி, மாத்தேரி, சித்தேரி ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர் இவைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    இதற்கான தீர்மானமும் கிராம சபையில் நிறை வேற்றப்பட்டன.

    கூட்டத்தில், ஊராட்சி முன்னாள் பொறுப்பாளர்களான பன்னீர் செல்வம், தேவராஜ், செல்வம், வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள் லட்சுமி, புனிதா, விஜயலட்சுமி, சுரேஷ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

    • காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறவுள்ளது.
    • சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கபடுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டத்திலு ள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினமான 22 ந்தேதி நாளை காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்க ளில் நடைபெ றவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் கீழ்கண்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்,கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்தும்,கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை.சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதி க்கபடுகிறது.மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், போன்றவை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு ள்ளார்கள். எனவே, கிராம பொது மக்கள் (சம்மந்தப்பட்ட ஊராட்சியின் வாக்காளர்கள் அனைவரும்) மேற்படி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சி களின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 26-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினமான 26-ந் தேதி (வியாழக்கிழமை) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் (1.4.2022 முதல் 31.12.2022 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம் - ஊரகம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் உள்ளிட்ட இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும். எனவே 26-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×