search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாமல் ஏன் வருகிறீர்கள்
    X

    குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாமல் ஏன் வருகிறீர்கள்

    • மாத்தூர் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வி
    • ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மாத்தூர் ஊராட்சியில் மே தினத்தையெட்டி கிராம சபைக் கூட்டம் தலைவர் லட்சுமி பாபு தலைமையில் நடந்தது.

    துணைத் தலைவர் கமலக்கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் பேசியதாவது:-

    நமது ஊராட்சிக்கு செய்யாற்று குடிநீர் கொண்டு வர கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இடையில் கூடுதல் செலவாக 50 லட்சம் ரூபாயும் ஒதுக்கபட்டது.

    ஆனால் இவ்வளவு நிதி ஒதுக்கியும் மாத்தூருக்கு குடிநீர் மட்டும் வரவில்லை. என, கேள்வி எழுப்பினர்.

    இங்கு கிராம சபை கூட்டத்திற்கு வந்திருக்கும் அதிகாரியே பதில் சொல்லலாமே.

    மேலும் காலம் தாழ்த்தாமல் செய்யாற்று குடிநீரை மாத்தூருக்கு கொண்டு வர போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    செய்யாற்று குடிநீர் கொண்டு வந்ததற்காக மாங்கால் கூட்ரோட்டில் கட்டப்பட்டுள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டியும், மாத்தூரில் அமைக்கப்பட்டுள்ள தரைதள நீர்தேக்க தொட்டியும் வீணாகித் தான் கிடக்கிறது.

    கடந்த முறை நடந்த கிராம சபைக் கூட்டத்திலும் செய்யாற்று குடிநீர் திட்டத்தைப் பற்றியே முன் வைத்தோம் ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

    அதிகாரிகளான நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என, சரமரியான கேள்வியை எழுப்பினர். இதனால் கிராம சபையில் பதட்டமான சூழ் நிலை ஏற்பட்டது.

    கிணற்றேரி, மாத்தேரி, சித்தேரி ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர் இவைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    இதற்கான தீர்மானமும் கிராம சபையில் நிறை வேற்றப்பட்டன.

    கூட்டத்தில், ஊராட்சி முன்னாள் பொறுப்பாளர்களான பன்னீர் செல்வம், தேவராஜ், செல்வம், வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள் லட்சுமி, புனிதா, விஜயலட்சுமி, சுரேஷ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

    Next Story
    ×