என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பால புரஸ்கார் விருது"
- யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. இவர் 1966ல் பட்டுக்கோட்டையில் பிறந்தவர்.
- தனது முதல் சிறுகதை தொகுப்பிற்கே லோகேஷ் ரகுராமன் சாகித்ய விருது பெறுகிறார்.
தமிழில் 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'தன்வியின் பிறந்தநாள்' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. இவர் 1966ல் பட்டுக்கோட்டையில் பிறந்தவர்.
2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் எழுதிய 'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வெளியான தனது முதல் சிறுகதை தொகுப்பிற்கே லோகேஷ் ரகுராமன் சாகித்ய விருது பெறுகிறார்.
- பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட்டது.
- விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் மோடி வரும் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடுகிறார்.
புதுடெல்லி:
மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது.
தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக 5-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு, கலை மற்றும் கலாச்சாரத் துறையில் (4), துணிச்சல் (1), புதுமை (2), சமூக சேவை (1) மற்றும் விளையாட்டு (3) என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிக்ழ்ச்சியில் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் மோடி வரும் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்