என் மலர்
நீங்கள் தேடியது "கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம்"
- ரெயிலுக்கு உள்ளே பயணிகளும், வெளியே ரயில்வே கேட்டிலும் நூற்றுக்கணக்கானோர் அவதி
- 45 நிமிடங்களுக்கும் மேலாக கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தம்.
சென்னையில் இருந்து கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் வழியாக ஆந்திராவிற்கு தினமும் பல ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ரெயிலின் அபாயச் சங்கிலியில் பையை தொங்கவிட்டதால் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் 45 நிமிடங்களுக்கும் மேலாக ரெயில் நிறுத்தப்பட்டது.
இதனால் ரெயிலுக்கு உள்ளே பயணிகளும், வெளியே ரெயில்வே கேட்டிலும் நூற்றுக்கணக்கானோர் அவதியடைந்தனர்.
ரெயில்வே போலீசார் விசாரணை செய்யும் போது, பயத்தில் வட மாநில இளைஞர் இறங்கி ஓடிவிட்டதாக பெட்டியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்
- தண்டவாளம் ரோந்து செல்லும் போலீசாருக்கு 600 மீட்டர் வரை ஒளி வீசும் திறன் கொண்ட விளக்கு வழங்கவும் சம்பவ இடத்தின் அருகில் 2 உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவும் ரெயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை:
சந்திரகாசி ரெயில் நிலையத்தில் படிக்கட்டில் பயணம் செய்த சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரசில் இருந்த மேற்கு வங்க வாலிபர் ரோணிசேக் என்பவரிடம் செல்போனை பறித்த போது கீழே விழுந்து பலியானார்.
கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜயகுமார், விஜய் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடந்து தண்டவாள ரோந்து அலுவல் நியமிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் தொடராமல் தடுக்க கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து 24 மணி நேரமும் காவலர்களை நியமித்து கண்காணிக்கவும் ரெயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தண்டவாளம் ரோந்து செல்லும் போலீசாருக்கு 600 மீட்டர் வரை ஒளி வீசும் திறன் கொண்ட விளக்கு வழங்கவும் சம்பவ இடத்தின் அருகில் 2 உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவும் ரெயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ரெயில் நிலையங்கள், ரெயில்களில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பயணிகள் ரெயில்வே போலீஸ் 24 மணிநேர உதவி மைய எண்:1512 மற்றும் தொலைத்தொடர்பு எண்:9962500500 ஆகியவற்றை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழும்பூர் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.