என் மலர்
நீங்கள் தேடியது "காபி கடை"
- சட்ட விரோதமாக இதுபோன்ற ஹூக்கா பார்களை நடத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- காபி கடை என்ற பெயரில் ஹூக்கா பார் போதை மையத்தை நடத்தியவர் சிக்கியுள்ளார்.
சென்னை:
சென்னையில் போதை தரும் பொருட்களை கொண்டு ஹூக்கா பார் நடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
சட்ட விரோதமாக நடத்தப்படும் இதுபோன்ற ஹூக்கா பார்களை நடத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வெளியில் தெரியாமல் ரகசியமாக நடத்தப்படும் ஹூக்கா பார்களுக்கு மத்தியில் 'காபி கடை' என்ற பெயரில் ஹூக்கா பார் போதை மையத்தை நடத்தியவர் சிக்கியுள்ளார்.
சென்னை ஆழ்வார் பேட்டை பகுதியில் 'காபி ரெஸ்டாரண்ட்' என்கிற பெயரில் காபி கடை ஒன்று நடத்தப்பட்டு வந்தது. இந்த காபி கடையில் ஹூக்கா பார் நடத்தப்பட்டு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது காபி ரெஸ்டாரண்டை முகேஷ் என்பவர் நடத்தி வந்தது தெரியவந்தது. இவர் சட்டவிரோதமாக காபி ரெஸ்டாரண்டில் ஹூக்கா பார் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஹூக்கா பாரில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ஹூக்கா போதைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், குழாய் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மாநகர் முழுவதும் இதுபோன்று ஹூக்கா பார் நடத்துவோரை கைது செய்ய கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.