என் மலர்
நீங்கள் தேடியது "கை துண்டிப்பு"
- சிமெண்ட் மற்றும் மணலை கலக்க உதவும், கலவை எந்திரத்தில், கலவை தயார் செய்து கொண்டி ருந்தார்.
- டாக்டர்கள் கூறியதை அடுத்த தமிழின் வலது கை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.
புதுச்சேரி:
திருவாரூர் மாவட்டம் பாலூரைச்சேர்ந்தவர் தமிழ் (வயது22). இவர், காரைக்காலை அடுத்த நிரவி பகுதியை சேர்ந்த மேஸ்திரி மணிகண்டன் (40) தலைமையில் கட்டிட வேலை செய்து வருகிறார். தமிழ் சம்பவத்தன்று, கட்டிடங்கள் கட்டும்போது, ஜல்லி, சிமெண்ட் மற்றும் மணலை கலக்க உதவும், கலவை எந்திரத்தில், கலவை தயார் செய்து கொண்டி ருந்தார். அப்போது, கலவை எந்திரத்தில் சத்தம் வந்ததை யடுத்து, தமிழ் கலவை எந்தி ரத்தில் உள்ளே கையை விட்டு ஆயில் ஊற்றினார். அப்போது தமிழின் வலது கை எந்திரத்தில் சிக்கியது. தொடர்ந்து, தமிழை அங்கிருந்தவர்கள் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரிசியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக, புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தமிழ் உயிருடன் இருக்கவேண்டுமென்றால் வலது கையை துண்டிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியதை அடுத்த தமிழின் வலது கை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து காரைக்கால் திரும்பிய தமிழ், காரைக்கால் நிரவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் தொழிலாளியை வேலை செய்ய அனுமதித்த கட்டிட மேஸ்திரி மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.