என் மலர்
நீங்கள் தேடியது "ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்"
- 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது.
- இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் தங்களது வாழ்த்துக்களை வீடியோ மூலம் தெரிவித்தனர்.
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதின. இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் ஜூனியர் டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு, ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் தங்களது வாழ்த்துக்களை வீடியோ மூலம் தெரிவித்தனர்.
A special message from Lucknow for India's ICC Under-19 Women's T20 World Cup-winning team ? ?#TeamIndia | #U19T20WorldCup pic.twitter.com/g804UTh3WB
— BCCI (@BCCI) January 29, 2023
இதில் பேசிய ராகுல் டிராவிட், இந்திய பெண்கள் ஜூனியர் அணிக்கு ஒரு முக்கியமான நாள் என வாழ்த்துக்கள் கூறினார். உங்களுக்கு ஆடவர் ஜூனியர் உலக கோப்பையை வென்ற பிரித்வி ஷா வாழ்த்துக்களை தெரிவிக்க உள்ளார் என கூறினார்.
அதனையடுத்து பேசிய பிரித்வி ஷா, ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகப் பெரிய சாதனை என கூறினார். அதனை தொடர்ந்து அனைத்து வீரர்களும் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.