search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹனுமா விஹாரி"

    • ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன் என்று ஹனுமா விஹாரி தெரிவித்தார்.
    • சமூக வலைதளத்தில் தன் தரப்பு விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.

    ரஞ்சி கோப்பையின் காலிறுதி போட்டியில் ஆந்திர பிரதேசம் அணி மத்திய பிரதேசம் அணியுடன் மோதி தோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் இனி எப்போதும் ஆந்திர பிரதேசம் அணிக்காக விளையாட மாட்டேன் என்று அந்த அணியை சேர்ந்த ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.

    அரசியல் காரணங்களுக்காகவே தான் அணியில் இருந்து விலகியதாக ஹனுமா விஹாரி தெரிவித்து இருந்தார். ஹனுமா விஹாரி குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த, ஆந்திரா அணியின் விக்கெட் கீப்பர், பேட்டர் கே.ன். ப்ருத்விராஜ், தனது சமூக வலைதளத்தில் தன் தரப்பு விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.

     

    அதில், "நீங்கள் கமென்ட்களில் தேடிக்கொண்டிருக்கும் நபர் நான் தான். ஆனால் நீங்கள் கேள்வியுற்ற தகவல் முற்றிலும் பொய்யான ஒன்று. போட்டி மற்றும் ஒருவரின் சுய மரியாதையை விட பெரியது எதுவும் கிடையாது. தனிநபர் தாக்குதல் மற்றும் ஆபாச மொழியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அணியில் உள்ள அனைவருக்கும், அன்று என்ன நடந்தது என நன்றாகவே தெரியும். இந்த அனுதாப விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் விளையாடி கொள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஹனுமா விஹாரி வெளியிட்டுள்ள பதிவில், "ஒட்டுமொத்த அணிக்கும் தெரியும்" என்ற தலைப்பில் கடிதம் ஒன்றின் புகைப்படத்தை இணைத்துள்ளார்.

    அந்த கடிதத்தில், "ரஞ்சி கோப்பையில் அணியை சேர்ந்த வீரர் நான் தவறான மொழியை பயன்படுத்தியதாகவும், அவரை மோசமாக நடத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால், நான் பயன்படுத்திய வார்த்தைகள் நம் அணிக்குள் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தை தான். அணியின் டிரெசிங் அறையில் இந்த வார்த்தைகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது."



    "ஆனாலும், ஒருவர் இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டுள்ளார். நாம் அனைவரும் ஒரே அணியை சேர்ந்தவர்கள், சமயங்களில் அணியில் உள்ள உதவியாளர் குழுவும் இது போன்ற சூழலை எதிர்கொண்ட சம்பவங்கள் உள்ளன. அந்த வகையில், விஹாரியே எங்களது அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு அவரிடம் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. அவர் எப்போதும் எங்களிடம் இருக்கும் திறமையை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளார்."

    "அவரது தலைமையில் நாங்கள் ஏழு முறைக்கும் அதிகாக தகுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். இந்த ரஞ்சி தொடர், வீரர்களாக எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆந்திரா ரஞ்சி வீரர்களாக எங்களுக்கு விஹாரி அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் அதில் அணி வீரர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.



    • கடைசியாக 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
    • 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 839 ரன்கள் அடித்துள்ளார்.

    30 வயதான ஹனுமா விஹாரி இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் சமீப காலமாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

    தற்போது ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க விரும்பினார். ரஞ்சி கிரிக்கெட்டில் ஆந்திர அணிக்காக விளையாடி வரும் அவர் ஏழு இன்னிங்சில 365 ரன்கள் அடித்துள்ளார்.

    தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து ஹனுமா விஹாரி கூறுகையில் "நான் இந்திய அணியில் இல்லாததை கவலையாகவும், ஏமாற்றமாகவும் உணர்கிறேன். அனைவருக்கும் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும்.

    தற்போது என்னுடைய பணி ரஞ்சி தொடரில் ரன்கள் குவிக்க வேண்டும் என்பதுதான். எனக்கும் அணிக்கும் இந்த சீசன் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. என்னுடைய லட்சியம் அதிக ரன்கள் குவித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான்" என்றார்.

    ஹனுமா விஹாரி 2018-ம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

    கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விளையாடினார். அதில் முறையே 22 மற்றும் 11 ரன்கள் அடித்தார்.

    இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 839 ரன்கள் அடித்துள்ளார்.

    • உடைந்த மணிக்கட்டைப் பாதுகாக்க இடது கை பேட்ஸ்மானக பேட்டிங் செய்தார்.
    • விஹாரி ஐந்து முதல் ஆறு வாரங்கள் விளையாட கூடாது என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

    ரஞ்சிக் கோப்பை கால் இறுதிப் போட்டியில் ஆந்திரா - மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆந்திரா அணியின் கேப்டன் விஹாரி 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த போது ஆவேஷ் கான் பந்து வீச்சில் அவருக்கு இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இதனால் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அந்த நேரத்தில், விஹாரி ஐந்து முதல் ஆறு வாரங்கள் விளையாட கூடாது என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

    ஆந்திரா அணி வீரர்கள் ரிக்கி புய் (149) மற்றும் கரண் ஷிண்டே (110) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஒரு கட்டத்தில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. இவர்கள் இரண்டு பேரும் அவுட் ஆனதற்கு பிறகு அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்.


    இதனால் 353 ரன்கள் 9 விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில்தான் விஹாரி மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். உடைந்த மணிக்கட்டைப் பாதுகாக்க இடது கை பேட்ஸ்மானக பேட்டிங் செய்தார். அவரது இடது கை முழுவதுமாக டேப் செய்யப்பட்ட நிலையில் ஒரு கையை மட்டுமே உபயோகித்து விளையாடினார்.

    விஹாரி கிட்டத்தட்ட பத்து ஓவர்களில் 26 ரன்கள் எடுத்தார். அவர் 9-வது இடத்தில் இருந்த லலித் மோகனுடன், பார்ட்னர்ஷிப்பில் ஸ்கோரின் பெரும்பகுதியைச் செய்தார். ஆந்திரா 9 விக்கெட்டுக்கு 379 ரன்களுக்கு முன்னேறியது.

    சிட்னியில், ஆர் அஷ்வினுடன் இணைந்து இந்தியாவுக்கான டெஸ்ட் போட்டியை காப்பாற்ற விஹாரி கிழிந்த தொடை எலும்புடன் பேட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

    ×