என் மலர்
நீங்கள் தேடியது "தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்"
- படத்தின் அனைத்து பாகங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.
- பைக், கார் ஸ்டண்ட்களை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டு இருந்தது.
இயக்குனர் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்' (The Fast and Furious). இப்படத்தின் ஒன்பது பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பத்தாவது பாகமும் உருவானது. இப்படத்தில் வின் டீசல், ஜேசன் மோமோவா, மைக்கேல் ரோட்ரிக்ஸ் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பைக், கார் ஸ்டண்ட்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இப்படத்தில் நடித்திருந்த வின் டீசல் மீது அவரது உதவியாளர் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2010-ம் ஆண்டு வின் டீசலிடம் பணிபுரிந்த அஸ்ட்ரோ ஜோனாசன் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
படப்பிடிப்பின் போது அட்லாண்டாவில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் பல பெண்களுடன் அறை எடுத்து வின் டீசல் உல்லாசமாக இருந்தார். அதிகாலை நேரத்தில் சினிமா புகைப்படக் கலைஞர்கள் வருவதை அறிந்து அனைவரையும் க்ளியர் செய்துக் கொண்டிருந்தோம். அவரை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் செல்லும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அந்த பெண்கள் எல்லாம் சென்று விட்ட நிலையில், வின் டீசல் என்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். நான் அவருக்கு ஒத்துழைக்க மறுத்த நிலையில், அவரது சகோதரி என்னை அடுத்த நொடியே வேலையில் இருந்து நீக்கி விட்டார். இவ்வாறு அஸ்ட்ரோ ஜோனாசன் கூறியுள்ளார்.
13 வருடங்களுக்கு பிறகு நடிகர் மீது அவரது உதவியாளர் பாலியல் புகார் கூறியுள்ள சம்பவம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ‘தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தின் ஒன்பது பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் பத்தாவது பாகம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இயக்குனர் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்' (The fast and furious). இப்படத்தின் ஒன்பது பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இதன் பத்தாவது பாகம் உருவாகி வருகிறது.
தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் 10
இப்படத்தில் வின் டீசல், ஜேசன் மோமோவா, மைக்கேல் ரோட்ரிக்ஸ் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பைக், கார் ஸ்டண்ட்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், 'தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்' (The fast and furious) படத்தின் பத்தாம் பாகத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
We're almost there...
— Vin Diesel (@vindiesel) January 31, 2023
We can't wait to share a taste of what's coming...
The Fast X Trailer Takeover fan event will celebrate the launch of Fast X in Los Angeles on Thurs, Feb 9th.
The Fast X trailer will debut worldwide the following day, at 8 a.m. pacific on Feb 10th. pic.twitter.com/kIIr65m1o9