என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிட்டாடல்"

    • சமந்தா நடிப்பில் வெளியான "தி ஃபேமிலி மேன்" தொடரை ராஜ் மற்றும் டீ.கே இயக்கியிருந்தனர்.
    • இந்த இயக்குனர்களுடன் சமந்தா மீண்டும் இணைந்துள்ளார்.

    சமந்தா நடிப்பில் 'யசோதா' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது சமந்தா 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. சமீபத்தில் சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

     

    சமந்தா - சிட்டாடல்

    சமந்தா - சிட்டாடல்


    இந்நிலையில் தற்போது சமந்தா மீண்டும் நடிக்க களம் இறங்கியுள்ளார். அதன்படி ராஜ் மற்றும் டீ.கே இயக்கும் 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் வரும் சமந்தாவின் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். அதில் மாடர்ன் தோற்றத்தில் சமந்தா ஸ்டைலாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    ராஜ் மற்றும் டீ.கே, சமந்தா நடிப்பில் வெளியான "தி ஃபேமிலி மேன்" தொடரை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ராஜ் மற்றும் டீ.கே இயக்கத்தில் உருவாகி வரும் சிட்டாடல் வெப் தொடரில் சமந்தா நடித்துள்ளார்.
    • இந்த வெப் தொடரின் விழாவில் சமந்தா உள்ளிட்ட படக்குழு பலரும் கலந்து கொண்டனர்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தற்போது "தி ஃபேமிலி மேன்" வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீ.கே இயக்கி வரும் 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் சமந்தாவுடன் இணைந்து வருண் தவான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்து சமந்தாவின் தோற்றத்தை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.


    சிட்டாடல் படக்குழு 

    சிட்டாடல் படக்குழு 

    இந்நிலையில் சிட்டாடல் பட விழாவில் சமந்தா, இயக்குனர் ராஜ் மற்றும் டிகே உள்ளிட்ட படக்குழு பலரும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
    • சமந்தா தற்போது நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர் வெளியாகியுள்ளது.

    தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவரி, நான் ஈ, கத்தி, தங்கமகன், தெறி, 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்த சிட்டாடல் வெப் தொடர் வெளியாகியுள்ளது.


    சமந்தா - ராம் சரண்

    சமந்தா - ராம் சரண்

    இந்நிலையில் சமந்தாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ராம் சரண் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அன்பான சமந்தா, உங்களையும் உங்களுடைய பணியையும் நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நீங்கள் நல்ல உடல் ஆரோகியத்துடன் இருக்க வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் சிட்டாலுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். 

    • அமெரிக்காவின் சிட்டாடல் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களை டூர் அழைத்துச் சென்றது.
    • 1,200 ஊழியர்களை அவர்களது குடும்பத்தினருடன் சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்துச் சென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் கென்னத் சி.கிரிபின். சிட்டாடல் என்ற நிதி நிறுவனம், கணினி தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட பல தொழில்களை செய்யும் இவர், தனது நிறுவன ஊழியர்களை நிறுவனத்தின் 30-வது ஆண்டு விழாவையொட்டி மகிழ்விக்க விரும்பினார்.

    அதற்காக சுமார் 1,200 ஊழியர்களை, அவர்களது குடும்பத்தினருடன் 3 நாள் சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்து சென்றுள்ளார்.

    டோக்கியோ நகரில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்வது, தங்குமிடம், உணவு என அனைத்து வசதிகளுக்கான செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார்.

    டிஸ்னிலேண்ட் கட்டணம் மட்டும் குறைந்தபட்சம் 88 ஆயிரம் டாலர் இருக்கும் என்று உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.72 லட்சமாகும்.

    மொத்த செலவுத்தொகையை அவர் வெளியிடவில்லை. இதுபற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவின் குர்கான் நகரில் இருந்து இந்நிறுவன பணியாளர்கள் சுற்றுலா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்துள்ளனர்.
    • இந்த தொடரின் இந்தி பதிப்பில் சமந்தா, வருண் தவான் நடித்து இருக்கிறார்கள்.

    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சமந்தா விவாகரத்து, மயோசிடிஸ் நோய் பாதிப்பு போன்ற பிரச்சினைகளால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து விட்டு இப்போது மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார். ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடரின் இந்தி பதிப்பில் சமந்தா, வருண் தவான் நடித்து இருக்கிறார்கள். ராஜ் அண்ட் டிகே இயக்கி உள்ளனர்.

    சிட்டாடல் தொடர் விரைவில் ஓ.டி.டி.யில் வெளியாக இருக்கும் நிலையில் லண்டனில் இந்த தொடரின் சிறப்பு காட்சி திரையிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரியங்கா சோப்ரா, சமந்தா ஆகியோர் பங்கேற்று ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர். அப்போது இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ×