search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகுக்கலை பயிற்சி"

    • சுய தொழில் துவங்குவது, சிகை அலங்கார பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    • தாட்கோ மூலம், 2.25 லட்சம் ரூபாய் மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    சென்னையில் உள்ள ஒரு அழகுக்கலை பயிற்சி மையம் மூலம், அழகு நிலையங்களில் பணிபுரிதல் மற்றும் சுய தொழில் துவங்குவது, சிகை அலங்கார பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பத்தாம் வகுப்பு படித்த, 18 முதல் 30 வயது வரையுள்ள மாணவ, மாணவிகள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

    மொத்தம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். சென்னையில் பயிற்சி அளிக்கும் அழகுக் கலை மையத்தில் தங்கி படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு, இந்திய தேசிய திறன் மேம்பாட்டு துறையால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். தனியார் அழகு கலை நிலையங்களில் வேலை வாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்வதற்கு, தாட்கோ மூலம், 2.25 லட்சம் ரூபாய் மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

    விருப்பமுள்ளோர், www/tahdco.com என்கிற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ×