search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவு நீர் கால்வாய் குழி"

    • நடந்து செல்வோர் தவறி கழிவுநீர் கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது.
    • பணம் எடுப்பதற்காக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாலை ஓரங்களில் கழிவு நீர் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையம் முன்பு உள்ள பகுதியில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி சுத்தம் செய்ய 2 இடங்களில் குழாய்கள் போடப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழிகளுக்கு மூடிகள் போடப்படவில்லை. இதனால் அந்த வழியே நடந்து செல்வோர் தவறி கழிவுநீர் கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது.

    மேலும், அருகிலேயே கூட்டுறவு வங்கியின் ஏடிஎம். எந்திரம் உள்ளது. அதில் பணம் எடுப்பதற்காக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அவர்களில் யாராவது தவறி விழும் அபாயமும் உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவு நீர் கால்வாய்க்கு மூடி போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×