search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசஞ்சர் ரெயில்"

    • நிர்வாக காரணங்களால் இந்த ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
    • இந்த அறிவிப்பால் பொதுமக்களும், பக்தர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினசரி பாஸ்ட் லோக்கல் மின்சார ரெயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும்.

    வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாஜா சாலை, சோளிங்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் இந்த ரெயிலைப் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த ரெயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே சமீபத்தில் அறிவித்தது.

    அதன்படி மே 2-ம் தேதி முதல் வண்டி எண் 06033 சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று வேலூர் ரெயில் நிலையத்துக்கு 9 மணி 35 நிமிடங்களுக்குச் சென்றடையும். அதன்பின், அங்கிருந்து பெண்ணத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மடிமங்கலம், போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 12 மணி 5 நிமிடங்களுக்குச் செல்லும்.

    திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் போளூர், மடிமங்கலம், ஆரணி ரோடு, சேதாரம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரெயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு 5.40 மணிக்கு வந்து சேரும்.

    அதனைத்தொடர்ந்து வேலூர் ரெயில் நிலையத்தில் இருந்து அனைத்து ரெயில் நிலையங்கள் வழியாக 9 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அடுத்த அறிவிப்பு வரும்வரை நிர்வாக காரணங்களால் இந்த பாசஞ்சர் ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே சென்னைகோட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்களும், பக்தர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடம் இல்லாததால் கழிவறையில் நின்று பயணம் செய்ய அனுமதிக்கின்றனர்.
    • புதுச்சேரியில் இருந்து தாம்பரம் வரை இந்த அவலநிலை நீடிக்கிறது.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு நேரடி ரெயில் சேவை காலை மற்றும் மாலையில் உள்ளது.

    முன்பதிவு இல்லாத இந்த ரெயிலில் சாதாரண டிக்கெட் பெற்று பயணிகள் எளிதில் பயணம் செய்ய முடியும் ரெயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வந்தால் இருக்கை கிடைத்துவிடும்.

    ஆனால் புறப்படும் நிலையத்தை தவிர இடையில் உள்ள நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதால் இருக்கைகள் மட்டுமின்றி உடமைகள் வைக்கக் கூடிய பகுதி, நடைபாதையில் எல்லாம் மக்கள் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.

    குறிப்பாக புதுச்சேரியில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 9 மணிக்கு வந்து சேரும் பாசஞ்சர் ரெயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது.

    அந்த ரெயில் விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் போன்ற நிலையங்கள் தவிர சிறிய நிலையங்களிலும் நின்று செல்வதால் வழி நெடுக மக்கள் ஏறுகிறார்கள். இதனால் படிக்கட்டில் நின்று பயணம் செய்கின்ற நிலை காணப்படுகிறது.

    பெண்கள், வயதானவர்கள் ரெயில் பெட்டியில் இடம் இல்லாததால் வழியில் அமர்ந்து பயணிக்கின்றனர். சிலர் கழிவறையில் நின்று பயணம் செய்கின்றனர். பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடம் இல்லாததால் கழிவறையில் நின்று பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். கழிவறையில் நின்றால் யாருக்கும் இடையூறாக இருக்காது எனக் கருதி அங்கே விட்டு விடுகின்றனர்.

    பாதுகாப்பு இல்லாத சுகாதாரமில்லாத அந்த இடத்தில் சிறுவர்கள் மட்டுமின்றி பெண்களும் நிற்கின்றனர். இதனால் அவசரமாக கழிவறையை பயன்படுத்த நினைப்பவர்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. புதுச்சேரியில் இருந்து தாம்பரம் வரை இந்த அவலநிலை நீடிக்கிறது.

    எனவே புதுச்சேரி - சென்னை இடையே ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

    • தண்டவாள பராமரிப்புப் பணி எனக் கூறி ரத்து செய்யப்பட்டது.
    • ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்த ஒரு மாதத்துக்கு ெரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகிறது.

    திருப்பூர்:

    கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக, கடந்த அக்டோபரில் 17 நாட்கள் ரத்து செய்யப்பட்டது. கடைசியாக அக்டோபர் 30ந் தேதி இயக்கப்பட்டது. அதன்பிறகு தண்டவாள பராமரிப்புப் பணி எனக் கூறி ரத்து செய்யப்பட்டது.5 மாதங்களாக இந்த ெரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்த ஒரு மாதத்துக்கு ெரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகிறது.

    தண்டவாள பராமரிப்பு, மேம்பாட்டு பணி முக்கியமானது என்றாலும் தொடர்ந்து ெரயில் இயங்காததால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் என 4 மாவட்ட பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    குறைந்தபட்ச நாட்களிலாவது ெரயிலை இயக்க வேண்டும். பணி நடக்கும் இடங்களை தவிர்த்து பிற பகுதிகளுக்கு ெ ரயிலை இயக்கலாமே என்று பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    • காவேரி - ஆனங்கூர் இடையே நடந்த பராமரிப்பு பணியால் ரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.
    • திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளடக்கிய மேற்கு மண்டல ரெயில் பயணிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    திருப்பூர் : 

    கொரோனா பரவலின் போது கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின் 2022 ஜூலை 11 ல் பாசஞ்சர் இயங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 3 நாள் மட்டுமே ரெயில் இயங்கிய நிலையில் ஜூலை 14 முதல் 24 வரை 10 நாட்களுக்கு காவேரி - ஆனங்கூர் இடையே நடந்த பராமரிப்பு பணியால் ரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் தொடர்ந்து 6-வது முறையாக, ரெயில் ரத்து என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில், இருகூர் - சூலூர் இடையே பொறியியல் மேலாண்மை பணி நடப்பதால் பிப்ரவரி 1-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, 28 நாட்களுக்கு கோவை - சேலம், சேலம் - கோவை ரெயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

    பொறியியல் மேம்பாடு, தண்டவாள பராமரிப்பு பணியை காரணம் காட்டி,5 மாதங்களாக பாசஞ்சர் ரெயில் இயங்காத நிலையில், 6-வது முறையாகவும், கோவை - சேலம்பாசஞ்சர் ரெயிலே ரத்து செய்யப்படுவது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளடக்கிய மேற்கு மண்டல ரெயில் பயணிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    ×