search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் வீடியோ"

    • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ பதிவிட்டவர் யார் என விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் முதலமைச்சரை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டது வெங்கடேஸ்வரராவ் என கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், சில்லக்கல்லு போலீஸ் நிலையத்தில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் வெங்கடேஸ்வரராவ் என்பவர் பணியாற்றி வந்தார்.

    இவர் செல்போன் வீடியோவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறு கருத்தை வெளியிட்டுள்ளார்.

    போலீசாருக்கு 3 மாத சம்பளம் வழங்காவிட்டால் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியில் இருந்து இறக்கப்பட்டு கவர்னர் ஆட்சி கொண்டுவரப்படும் எனவும் மேலும் சில அவதூறான வார்த்தைகளை பேசி தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவு செய்தார்.

    அவர்கள் மேலும் சிலருக்கு வீடியோவை அனுப்பி வைத்ததால் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ பதிவிட்டவர் யார் என விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் முதலமைச்சரை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டது வெங்கடேஸ்வரராவ் என கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சில்லக்கல்லு போலீசார் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்வரராவை கைது செய்தனர்.

    அவரை ஜக்கையப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×