என் மலர்
நீங்கள் தேடியது "காா் பணிமனை"
- புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
- காா் பணிமனையில் சோதனை மேற்கொண்டனா்.
அவிநாசி :
அவிநாசியை அடுத்த ஆட்டையாம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதியில் இருந்த காா் பணிமனையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு விற்பனைக்காகப் பதுக்கிவைத்திருந்த 80 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். விசாரணையில் மொத்தமாக பதுக்கிவைத்திருப்பதாக கூறப்பட்ட சேவூா் அருகே போத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஹா்ஷத் (எ) திருமூா்த்தி (31) வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது வீட்டில் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து, இதில் தொடா்புடைய கோவை, மேட்டுப்பாளையம் சௌகத் அலி மகன் தா்வேஸ் முகைதீன் (36), சேவூா் பகுதியைச் சோ்ந்த முகமது பஷீா் மகன் ஜெயிலாபுதீன் (48) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் தலைமறைவான திருமூா்த்தியை போலீசார் தேடி வருகின்றனா்.