search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீனஸ் வில்லியம்ஸ்"

    • அமெரிக்க ஓபனில் இதுவரை 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார்
    • இதுபோன்று மோசமான தோல்வியை எதிர்கொண்டது கிடையாது

    அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ், இத்தொடருக்கான தரவரிசை பெறாத பெல்ஜியத்தை சேர்ந்த கிரீட் மின்னென்-ஐ எதிர் கொண்டார்.

    இதில் 43 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 1-6, 1-6 எனத் தோல்வியடைந்தார். 2000 மற்றும் 2001-ல் அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வீனஸ் வில்லியம்ஸ், 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். அதில் இதுதான் மிகவும் மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது.

    வீனஸ் வில்லியம்ஸ் ஆட்டத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். ரசிகர்களின் ஆதரவு குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில் ''ரசிகர்களின் ஆதரவை பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. எப்போதும் ரசிகர்கள் எனக்காக இங்கே வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். முன்னெப்போதையும் விட இன்னும் அந்த ஆதரவைக் கொண்டிருப்பது அருமையானது'' என்றார்.

    • சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • 7-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப்பூம் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    விம்பிள்டன் பட்டத்தை 5 முறை வென்ற முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

    சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல 7-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப்பூம் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார். சோபியா கெனின் 6-4, 4-6, 6-2 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த கவூப்பை வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்ற ஆட்டங்களில் முதல்நிலை வீராங்கனையான இகாஸ்வியா டெக் (போலந்து), 4-வது வரிசையில் உள்ள பெகுலா (அமெரிக்கா), கரோலினோ கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) தொடக்க சுற்றில் பிரான்சை சேர்ந்த லவுரென்ட் லோகோலியை எதிர்கொண்டார். இதில் கேஸ்பர் ரூட் 6-1, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.

    • உண்மையைச் சொல்லபோனால் காயத்தால் நான் மிகவும் துன்பத்தை அனுபவித்தேன்.
    • ஓடுவதற்கு முன்னால் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நான் கூடிய விரைவில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவேன்.

    7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்சுக்கு இப்போது 42 வயது ஆகிறது. கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் வைல்டு கார்டு வாய்ப்பை பெற்று விளையாடியபோதிலும் அதற்கு முன் ஆக்லாந்து போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியில் ஈடுபட்ட போது காயம் காரணமாக போட்டியிலிருந்து வீனஸ் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    இந்நிலையில், அவர் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது யூ-டியூப் சேனலில் அவர் கூறியிருப்பதாவது:

    உண்மையைச் சொல்லபோனால் காயத்தால் நான் மிகவும் துன்பத்தை அனுபவித்தேன். இப்போது எனக்கு நீண்ட கால காயம் ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு என்னால் மீண்டு வர முடியாது.

    சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, நான் எனது மருத்துவர்களுடான சந்திப்புகளை அமைக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு அடுத்தது என்ன என்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினேன். நான் திரும்பி வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

    ஓடுவதற்கு முன்னால் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நான் கூடிய விரைவில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவேன். ஆனால், இப்போதைக்கு நான் டென்னிஸ் விளையாட மாட்டேன் என்று யூ-டியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.

    5 முறை விம்பிள்டன் ஓபனிலும், 2 முறை யு.எஸ். ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் வீனஸ் வில்லியம்ஸ். மகளிர் ஒற்றையர் பிரிவில் சர்வதேச தரவரிசையில் அவர் 664ஆவது இடத்தில் உள்ளார்.

    ×