என் மலர்
நீங்கள் தேடியது "நகைபறித்த வழக்கு"
- தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.
- 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றனா்.
வெள்ளகோவில் :
திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் பெருமாள்புதூா் பகுதியை சோ்ந்த முருகேசன் மனைவி ஜீவா (வயது 43). இவா் ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் இவா் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் கடந்த ஜனவரி 24-ந்தேதி மாலை வீடு திரும்பி கொண்டிருந்தாா்.ஈரோடு முத்தூா் சாலை மு.வேலாயுதம்பாளையம் அருகே சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2பேர் ஜீவா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றனா்.இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஜீவா புகாா் அளித்தாா். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினா்.
இதில் ஈரோடு மாவட்டம் பவானியை சோ்ந்த ஆறுமுகம், கோவை செல்வபுரம் சாலை ஜோதிபுரம் பாரதி நகரை சோ்ந்த மாரீஸ்வரன் (27) ஆகியோர் நகைபறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.இவா்கள் ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மாரீஸ்வரனை தேடி வந்தனா்.இந்நிலையில் அவரை வெள்ளக்கோவில் போலீசார் நேற்று கைது செய்தனா்.