என் மலர்
நீங்கள் தேடியது "குண்டாஸ் பாய்ந்தது"
- சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையின் பேரில் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
- திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் ஞானசேகரன் மீது உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணைக் குழு அதிகாரிகள் இன்று காலை ஞானசேகரன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் ஞானசேகரன் பயன்படுத்தி வந்த லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையின் பேரில் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஞானசேகரன் மீது ஏற்கனவே 3 முறை குண்டாஸ் போடப்பட்ட நிலையில், 4வது முறையாக ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் ஞானசேகரன் மீது உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- பார்வதியை சக்திவேல் கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக
- போலீசார் அவரை கைது செய்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீழானூர் காப்பு காட்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் 33 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் அரை நிர்வாணமாக அழுகிய நிலையில் இருந்தது.
இது தொடர்பாக அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது விசாரணையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சித்தேரி ஊமத்தி கிராமத்தை சேர்ந்த ஆண்டியப்பன் மனைவி பார்வதி (33) என்பது தெரிய வந்தது.
வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (42) என்பவரு க்கும், பார்வதிக்கும் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பார்வதியை சக்திவேல் கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து தருமபுரி காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் சாந்தி குற்றவாளி சக்திவேல் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர பாபு, குற்றவாளி சக்திவேல் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.