search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் தெப்ப உற்சவம்"

    • விழாவின் கடைசி நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    • சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூசத் தேர் திருவிழா கடந்த 30 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது. பின்னர் தைப்பூச பால்குட ஊர்வலம், சாமி திருக்கல்யாண உற்சவம், விநாயகர் தேரோட்டம், சிவசுப்பிரமணிய சாமி தேரோட்டம் விழா, கொடியிறக்கம், பல்லக்கு உற்சவம் ஆகியவை நடைபெற்றது. விழாவின் கடைசி நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    இதையொட்டி சாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தெப்ப குளத்தில் 7 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    ×