search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரத்ததான முகாம்"

    • தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 37-வது அமைப்பு தினத்தையொட்டி அவிநாசியில் ரத்த தானம் நடைபெற்றது.
    • ரத்த தான முகாமில் 20 போ் பங்கேற்று ரத்த தானம் செய்தனா்.

    அவிநாசி:

    தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 37-வது அமைப்பு தினத்தையொட்டி அவிநாசியில் ரத்த தானம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தாா்.

    இதில், கண் சிகிச்சை, ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், இசிஜி, எக்கோ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. முகாமில் 300-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை செய்துகொண்டனா்.

    மேலும், ரத்த தான முகாமில் 20 போ் பங்கேற்று ரத்த தானம் செய்தனா்.நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட தலைவா் சாந்தி, மாவட்ட செயலாளா் செந்தில்குமாா், துணைத் தலைவா் ரமேஷ் குமாா், மாவட்ட, வட்டார கிளை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ரத்தம் கொடுப்பது மீண்டும் ,மீண்டும் உடலில் ரத்தம் உருவாகி புத்துணர்ச்சியை ஏற்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும்.

    பல்லடம்:

    பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, வழக்கறிஞர் சங்கம்,திருப்பூர் லயன்ஸ் கிளப் மற்றும் கோவை லைன்ஸ் ரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா தலைமை வகித்தார். வழக்கறிஞர் சங்க செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். ரத்ததான முகாமை பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி துவக்கி வைத்து பேசியதாவது :-

    அனைவரும் ரத்தம் கொடுத்தால் உடலுக்கு இடையூறு ஏற்படும் என்று எண்ணுவதை விட்டுவிட்டு ரத்தம் கொடுப்பது மீண்டும் ,மீண்டும் உடலில் ரத்தம் உருவாகி புத்துணர்ச்சியை ஏற்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும். இதனை அனைவரும் புரிந்துகொண்டு ரத்தம் கொடுக்க முன்வர வேண்டும் என்றார். இந்த முகாமில் 37 பேர் ரத்ததானம் செய்தனர். அவர்களை நீதிபதிகள் சந்தான கிருஷ்ணசாமி, சித்ரா, மற்றும் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.

    ×