search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவியல் வளர்ச்சி"

    • அறிவியல் வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பது வீண் பயம் என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியில் கூறினார்.
    • அரசு பள்ளி, தனியார் பள்ளி என நாம் தான் தேவையில்லாமல் வேறு படுத்தி பார்க்கிறோம் என்றும் பேசினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எஸ்.எஸ்.எல்.வி. டி2 ராக்கெட் வெற்றிகரமாக ஏவியதன் மூலம் இனி வணிக ரீதியான ராக்கெட்டுகளை ஏவ முடியும். நிலவுக்கு செயற்கை கோள்களை அனுப்ப சோத னைகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவடைந்தவுடன் நிலவுக்கு ராக்கெட் மூலம் செயற்கைகோள் ஏவப்படும்.

    ஆன்மீகமும், அறிவி யலும் முக்கியமானது. ஆன்மீகத்தில் அறிவிய லையும், அறிவியலில் ஆன்மீகத்தையும் பார்க்க கூடாது. இவற்றின் மூலம் மக்கள் முன்னேற முயற்சிக்க வேண்டும் என்றார்.

    அரசு பள்ளியில் படிப்பது இழிவு கிடையாது. அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு சளைத்தது கிடையாது. நான் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்து ரையாடிய போது அவர்கள் திறமையானவர்களாக உள்ளனர் என்பதை கண்டறிந்தேன்.

    அரசு பள்ளி, தனியார் பள்ளி என நாம் தான் தேவையில்லாமல் வேறு படுத்தி பார்க்கிறோம். குறிப்பிட்ட தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அதற்கு காரணம் பள்ளி அல்ல, மாணவர்கள் போதிய பயிற்சி எடுக்காததே காரணமாகும். ஆண்டு தோறும் அறிவி யல் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் வேலை வாய்ப்பு குறையாது. அறிவியல் வளர்ச்சியால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது வீண் பயம் ஆகும். புது, புது முயற்சிகளை மேற்கொண்டால் நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×