search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் நூதன வழிபாடு"

    • பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபடுவார்கள்.
    • குழிக்குள் வைத்து மூடப்படுவதால் அம்மனுக்கு 'மூடி அம்மன்' என்று பெயர்.

    பல்லடம்:

    இறைவனை வழிபடுவதில் பல்வேறு விதமான பழக்க வழக்கங்கள் இருந்து வருகிறது. இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தீ மிதித்தல், முடி காணிக்கை, எடைக்கு எடை துலாபாரம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான வழிபாடுகள் உள்ளது.

    அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த முழுக்காதான் குலத்தை சேர்ந்தவர்கள், குழி அமைத்து அதில் அம்மன் சாமியை வைத்து மூடி அம்மன் என்று வழிபாடு செய்து வருகின்றனர்.

    அதன்படி பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதிபாளையத்தில் மூடி அம்மன் வழிபாடு நடைபெற்றது. இதுகுறித்து முழுக்காதான் குலத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    எங்கள் குல குழந்தைகளின் காதணி விழாவுக்கு சுமார் 3 நாட்கள் முன்பாக மூடி அம்மனை வழிபடுவது வழக்கம். காதணி விழா குடும்பத்தினர், குழிக்குள் உள்ள மூடி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து பழம், பூ , தேங்காய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபடுவார்கள்.

    மூடி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்ட பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கி, வழக்கம்போல் குழி மூடப்படும். இந்த விழாவானது அம்மனிடம் உத்தரவு கேட்கப்படும் நிகழ்வு.

    இதுபோல் அம்மனிடம் உத்தரவு கேட்டு குடும்ப விழாக்கள் செய்தால் அவை எந்த இடர்பாடும் இன்றி நல்லபடியாக நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதுகாலம் காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூடி அம்மனை வழிபட்ட பின்னர் நவ தானியங்கள் வைத்து வழிபாடு செய்து குழியை மூடி விடுவார்கள்.

    பின்னர் வேறு ஏதேனும் திருமணம், காதணி விழா உள்ளிட்ட விழா செய்யும் குடும்பத்தினர் மூடி அம்மனிடம் உத்தரவு கேட்பதற்காக மீண்டும் வழிபாடு நடக்கும். அதுவரை மூடி அம்மன் குழிக்குள் இருப்பார். குழிக்குள் வைத்து மூடப்படுவதால் அம்மனுக்கு 'மூடி அம்மன்' என்று பெயர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பெண்களும் அமர்ந்து கொண்டு சக்தி அழைப்பு செய்தனர்.
    • நினைத்து காரியம் நிறைவேறும் என்பதால் தரையில் படுத்துக்கொண்டு நூதன வழிபாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈடுப்பட்னர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அடுத்துள்ள ஏ.சப்பானிப்பட்டி கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் இறுதியில் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.

    அதே போல் இந்தாண்டும் காமாட்சியம்மன் கோவில் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கிராமத்தில் உள்ள மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து வருதல், முருக பெருமானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிசேகம் செய்தல் என ஒரு வாரம் நடைபெற்றது.

    இந்த விழாவில் அதே பகுதியை சேர்ந்த 24 மணி செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு தங்களது உறவினர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.மேலும் இந்த விழாவில் அம்மன் கரகத்தை பூலான் நதி ஆற்றங்கரையில் வைத்து ஒரு பகுதியில் ஆண்களும் மற்றொரு பகுதியில் பெண்களும் அமர்ந்து கொண்டு சக்தி அழைப்பு செய்தனர்.

    அப்போது அம்மன் அருள் வந்த பக்தர் மீது கரகம் வைத்து கோவிலுக்கு கொண்டு சென்றனர். அப்போது கரகம் எடுத்து செல்பவர் தரையில் நடந்து செல்லாமல் இருக்க பக்தர்கள் அனைவரும் தரையில் படுத்துகொண்டனர்.

    பின்னர் கரகம் எடுத்து செல்பவர் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு தரையில் படுத்திருக்கும் பக்தர்கள் மீது நடந்து சென்றனர்.

    கரகம் தங்களது மீது நடந்து சென்றால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும், நோய் தீரும், தொழில் வளர்ச்சி மற்றும் குடும்ப வளர்ச்சி, நினைத்து காரியம் நிறைவேறும் என்பதால் தரையில் படுத்துக்கொண்டு நூதன வழிபாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈடுப்பட்னர்.

    ஆதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் குழுமிய பக்தர்களுக்கு அருளாசியும், சாட்டையடி நிகழ்வும் நடைபெற்றது.

    கடைசி நாளான நாளை 12-ந் தேதி நடைபெரும் ஆண்கள் மட்டுமே பங்குபெற்று கிடா வெட்டி நூதன வழிபாடு நடைபெரும். இத்திருவிழாவிற்கு ஏ.சப்பானிபட்டி கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×