என் மலர்
நீங்கள் தேடியது "அம்ரித் பாரத் ஸ்டேஷன்"
- நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
- சிறப்பு திட்டத்தின் கீழ் திருப்பூர் ரெயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது
திருப்பூர்:
மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் சேலம் ரெயில்வே கோட்டத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்பட 16 ரெயில் நிலையங்களில் நவீன வசதிகள் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்தப்பட உள்ளது. அதிக வருவாய், வரவேற்பு மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் 1,275 ரெயில் நிலையங்களில் புதிய நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் திருப்பூர் ரெயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் நவீன வசதிகள் மேம்படுத்தப்பட இருக்கிறது. குறைந்தபட்சம் அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி, ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம், ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு, இலவச வைபை வசதி, காத்திருப்போர் அறை, கழிப்பிட மேம்பாடு, சுகாதாரம், ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.