என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்பி கார்த்தி சிதம்பரம்"

    • அதானி குழுமத்திற்கு வங்கிகள் எதன் அடிப்படையில் கடன் கொடுத்தன?
    • ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி என்பதை ஏற்க முடியாது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனிடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

    ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

    கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்க தான் செய்யும். திமுக காங்கிரஸ் இடையேயும் ஒருசில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உண்டு. சிறைகளில் உள்ள 75 சதவீதம் பேர் குற்றம் நிரூபிக்கப்படாமல் தான் உள்ளனர். தனிநபர்கள் மீதான வரியை குறைக்க வேண்டும். தனிநபர்கள் மீதான வரியை குறைத்தால் நாங்கள் வரவேற்போம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுமான பணிகளையே இன்னும் தொடங்கவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்புகள் ராமநாதபுரத்தில் தான் நடந்து வருகிறது. அதானி குழுமத்திற்கு வங்கிகள் எதன் அடிப்படையில் கடன் கொடுத்தன? அதானி குழுமத்தில் ஏன் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன? ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி என்று சொல்வதை ஏற்க முடியாது. இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் பேசினார்.

    ×