search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி சுற்றுலா"

    • பிரெஞ்சு குடும்பத்தினர் 3 சக்கர சைக்கிளை சொந்தமாக வாங்கி அதில் புதுவையை வலம் வந்து அசத்துகின்றனர்.
    • ஒருவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் அதை 3 சக்கர சைக்கிளில் அமர்ந்து நகரை வலம் வந்தபடியே கொண்டாடினர்.

    புதுச்சேரி:

    சுற்றுலா நகரமான புதுவைக்கு தினமும் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    அவ்வாறு வருபவர்கள் புதுவையின் அழகை ரசித்து பார்த்து செல்கின்றனர். புதுவைக்கு வரும் வெளிநாட்டினர் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் போவதை காட்டிலும் கை ரிக்ஷாக்களில் சென்று கடற்கரை உள்ளிட்ட ஒய்ட் டவுனின் புராதன பகுதிகளை பார்க்க விரும்புவார்கள்.

    அவர்கள் வரிசையாக கை ரிக்ஷாவில் அமர்ந்து புதுவை கடற்கரை சாலையில் பயணிக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த நிலையில் புதுவைக்கு சுற்றுலா வந்த ஒரு பிரெஞ்சு குடும்பத்தினர் 3 சக்கர சைக்கிளை சொந்தமாக வாங்கி அதில் புதுவையை வலம் வந்து அசத்துகின்றனர்.

    இந்த வாகனம் வித்தியாசமாகவும், சவுகரியமாகவும் உள்ளதால் புதுவையில் தங்கியுள்ள அனைத்து நாட்களிலும் இந்த வாகனத்திலேயே சென்று பல்வேறு பகுதிகளை பார்வையிட முடிவு செய்துள்ளனர்.அதில் ஒருவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் அதை 3 சக்கர சைக்கிளில் அமர்ந்து நகரை வலம் வந்தபடியே கொண்டாடினர்.

    இந்த காட்சிகள் புதுவை மக்களையும், சுற்றுலா வந்த மற்ற ஊர்க் காரர்களையும் வெகுவாக கவர்ந்தது.

    ×