என் மலர்
நீங்கள் தேடியது "மாரத்தான் போட்டி"
- 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.6 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5ஆயிரம், ஆறுதல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது.
மதுரை:
மதுரையில் 'சுற்றுச் சூழலை பாதுகாப்போம். பொது போக்குவரத்தை பலப்படுத்துவோம்' என்பதை வலியுறுத்தி, தமிழக அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி இன்று நடந்தது.
திருநகரில் உள்ள பள்ளிக்கூடம் முன்பு இருந்து பொது பிரிவினருக்கான மாரத்தான் போட்டி தொடங்கியது. இந்த போட்டியை மதுரை எம்.பி. வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.
12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டி, பசுமலை மன்னர் கல்லூரி முன்பு தொடங்கியது. மதுரையில் நடந்த இந்த 2மாரத்தான் போட்டிகளிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மதுரை பைபாஸ் ரோடு தமிழக அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு, மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் பொது பிரிவினருக்கான மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.6 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5ஆயிரம், ஆறுதல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது.
இதே போல பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.8 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.4ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 2 ஆயிரம், ஆறுதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் அழகர்சாமி, ராஜேந்திரன், கனகசுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.