search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலுகுலு"

    • இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘குலுகுலு’.
    • இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் குறிப்பிட்ட காட்சியை எந்த வித விளக்கமும் இல்லாமல் சென்சார் போர்டு நீக்கியுள்ளது.

    'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருந்த திரைப்படம் 'குலுகுலு'. இந்த படத்தில் கதாநாயகனாக சந்தானம் நடித்திருந்தார். மேலும் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குலுகுலு

    விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், 'குலுகுலு' படத்தின் தெலுங்கு பதிப்பில் இந்திய பிரதமர் என குறிப்பிடும் காட்சியை எந்த வித விளக்கமும் இல்லாமல் சென்சார் போர்டு நீக்கியுள்ளது.


    குலுகுலு

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் ரத்னகுமார் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "திரைப்பட சென்சாரில் தன்னிச்சையாக காட்சிகளை நீக்குவது நியாயமற்ற விஷயம். 'குலுகுலு' படத்திற்கு இது நடந்தது என்பதால் மட்டும் நான் இதை கூறவில்லை. ஜனநாயகத்தில் கலை மிக முக்கியமான தூண். அதன் மீது நீங்கள் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறீர்கள். தமிழ்நாட்டை, தமிழகம் என மாற்றுவதற்கு பதில் இந்தியாவை 'united states of india' என பெயர் மாற்றம் செய்து விடுங்கள்" என ஆதங்கமாக பதிவிட்டுள்ளார்.


    ×