என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமராவதி நகர்"
- யானை நடமாட்டத்தால் பஸ் நிறுத்தத்திற்கு வர பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
- அணைகளில் தண்ணீர் வற்றி விட்டதால் யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணைக்கு படையெடுத்து வருகின்றன.
உடுமலை:
உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் ஒன்பதாறு செக் போஸ்ட் முதல் சின்னாறு வரை இருபுறமும் உடுமலை அமராவதி வனச்சரகபகுதிகள் உள்ளன.இங்கு ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், காட்டுபன்றிகள்உள்ளன. கோடை காலங்களில் காட்டுயானைகள் மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம். பனிக்காலம் முடிந்து கோடை ஆரம்பித்துள்ளது.
இதனால் வனப்பகுதியில் உள்ள அணைகளில் தண்ணீர் வற்றி விட்டதால் யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணைக்கு படையெடுத்து வருகின்றன.இந்நிலையில் தனது கூட்டத்திலிருந்து வழி தவறிய ஒற்றை யானை அமராவதி நகர் முருகன் கோவில்பகுதியில் சுற்றி திரிகிறது. அதன் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. யானை நடமாட்டத்தால் பஸ் நிறுத்தத்திற்கு வர பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மீண்டும் மீண்டும் அந்த யானை பஸ் நிறுத்தம் பகுதியில் சுற்றி வருகிறது. இதனால் அப்பகுதியில் ரோந்து செல்லும் போலீசாரும் தயங்குகின்றனர். கிராம மக்களும் அச்சத்தில் உள்ளனர். யானையை பாதுகாப்பாக வனத்துக்குள் விரட்டி விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.