search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.கே. மணி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழா"

    • ஜி.கே. மணி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழா தருமபுரி ஜோதி மகாலில் நடந்தது.
    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்.

    தருமபுரி,

    பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழா தருமபுரி ஜோதி மகாலில் இன்று (வியாழக்கிழமை) நடந்தது.

    முன்னதாக நேற்று இரவு மணமக்கள் வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்.

    முன்னதாக அவரை ஜி.கே. மணி எம்.எல்.ஏ., லைகா நிறுவன முதன்மை நிர்வாக அலுவலர் ஜி.கே. எம். தமிழ் குமரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.என்.நேரு, தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, பா.ம.க. மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. எம்.ஜி. சேகர், தி.மு.க. நகர செயலாளர் நாட்டான் மாது, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் தர்மசெல்வன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் உமாசங்கர், ரேணுகாதேவி, ஆறுமுகம், சப்தகிரி கல்லூரி நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது மற்றும் பா.ம.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×