என் மலர்
நீங்கள் தேடியது "அய்யம்பாளையம் மாதேஸ்வர சுவாமி கோவில்"
- நாளை இரவு 8மணியில் இருந்து 9மணி வரை முதற்கால சிவ பூஜை நடக்கிறது.
- நாளை மறுநாள் 19-ந் தேதி அதிகாலை 4மணியில் இருந்து 5 மணி வரை 4-ம் கால மகா பூஜை நடக்கிறது.
ஊத்துக்குளி :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள அய்யம்பாளையம் மாதேஸ்வர சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
இதைெயாட்டி நாளை இரவு 8மணியில் இருந்து 9மணி வரை முதற்கால சிவ பூஜை நடக்கிறது. 10மணியில் இருந்து 11 மணி வரை 2-ம் கால ருத்ராபிஷேக பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் 19-ந்தேதி அதிகாலை 2மணியில் இருந்து 3மணி வரை 3-ம் கால சிவ பூஜை நடக்கிறது. அதிகாலை 4மணியில் இருந்து 5 மணி வரை 4-ம் கால மகா பூஜை நடக்கிறது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ளும்படி அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் கதித்தமலை வனம் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.