search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெங்கசாமி செட்டியார்"

    • திருப்பூர் நகரத்தின் மையமாகவும் அடையாளமாகவும் டவுன்ஹால் கட்டிடம் இருந்து வந்துள்ளது.
    • ஸ்மார்ட்சிட்டிக்காக பழைய கட்டிடத்தை இடித்து புதுப்பொலிவுடன் கட்டப்பட்டு வருகின்றது .

    திருப்பூர் :

    அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சவுடேஸ்வரி நற்பணி மன்றத்தின் ஆலோசனை கூட்டம் திருப்பூர் குமாரனந்தபுரத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு திருப்பூர் மண்டல தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தேவராஜ் ,பொருளாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திருப்பூர் நகரத்தின் மையமாகவும் அடையாளமாகவும் டவுன் ஹால் கட்டிடம் இருந்து வந்துள்ளது.இதனை தேவாங்க சமூக வள்ளல் ரங்கசாமி செட்டியார் நினைவாக அவரது குடும்பத்தினர் தானமாக திருப்பூர் மக்களுக்காக வழங்கினர். 1955-ம் ஆண்டில் அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. தற்பொழுது ஸ்மார்ட்சிட்டிக்காக பழைய கட்டிடத்தை இடித்து புதுப்பொலிவுடன்கட்டப்பட்டு வருகின்றது .

    இந்த கட்டிடத்திற்கு ஏற்கனவே இருந்து வந்த ரங்கசாமி செட்டியார் நினைவு ஹால் என்ற பெயரினை மீண்டும் சூட்ட வேண்டும். மேலும் ரங்கசாமி செட்டியார் சிலை மற்றும் மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், நகராட்சி துறை அமைச்சர், திருப்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.

    ×