search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரண்டன் மெக்கல்லம்"

    • இந்த டெஸ்ட் போட்டி எத்தனை நாள் நீடிக்கும் என்று எனக்கு தெரியாது.
    • ஆனால் இரு அணிகளும் தங்களுக்கு உரிய ஸ்டைலில் விளையாடுவார்கள்.

    இந்தியாவுக்கு வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில் எங்களது யுக்தி இந்தியாவில் சோதிக்கப்படும் என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பிரண்டன் மெக்கல்லம் கூறியதாவது:-

    இந்திய தொடர் முழுவதும் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். நான் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றபோது எங்களால் முடிந்த வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரசிகர்களை குதூகலப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அதுவே வெற்றியையும் தேடித் தந்தது.

    எங்களது அதிரடி பேட்டிங்கை, இந்தியாவுக்கு எதிராக அதுவும் இந்திய மண்ணில் சோதிப்பதை விட ஏதேனும் சிறப்பு இருக்கிறதா என்ன? இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே இது எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். இந்த டெஸ்ட் போட்டி எத்தனை நாள் நீடிக்கும் என்று எனக்கு தெரியாது.

    ஆனால் இரு அணிகளும் தங்களுக்கு உரிய ஸ்டைலில் விளையாடுவார்கள். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆஷஸ் கிரிக்கெட் போல் இந்த தொடரும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டியிலும் 20 விக்கெட்டுகளை எடுப்பது மற்றும் எதிரணியைவிட குறைந்தது 1 ரன்னாவது கூடுதலாக எடுப்பது வெற்றியின் சாரம்சமாகும். எங்களது யுக்தி இந்த தொடரில் பரிசோதிக்கப்படும். இதுவே எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

    இவ்வாறு மெக்கல்லம் கூறினார்.

    • இந்த போட்டியில் 99 ரன்கள் விளாசிய ஷிகர் தவான் கடைசி வரை அவுட் ஆகவில்லை.
    • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி நடந்தது. முதல் போட்டிகளில் தோல்வியை தழுவிய சன்ரைசர்ஸ் அணி, முதல் 2 போட்டிகளிலும் ஜெயித்த பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.

    முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற அனைவருமே மோசமாக பேட்டிங் ஆடினர். பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடிய ஷிகர் தவான் 99 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்சை முடித்து கொடுத்தார்.

    கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தும் ஒரு ரன் கூடுதலாக அடிக்க முடியாததால் அவரால் சதமடிக்க முடியவில்லை. தவானை தவிரவேறு யாருமே சரியாக ஆடாததால் 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணி அடித்தது. 144 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் 99 ரன்கள் விளாசிய ஷிகர் தவான் தனித்துவ சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல்லில் ஒரு அணி அடித்த ஸ்கோரில் அதிகமான சதவிகித ரன்னை அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அடித்த ஸ்கோரில் (143), 69.23 சதவிகித ரன்னை தவான் ஒருவரேஅடித்தார்.

    இந்த பட்டியலில் பிரண்டன் மெக்கல்லம் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல்லின் முதல் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் அடித்த 222 ரன்களில் 158 ரன்கள்(71.17%) மெக்கல்லம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    • தற்போது பயிற்சியாளராக இருக்கும் மெக்கல்லத்தின் நீண்டகால சாதனையை ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.
    • ஸ்டோக்ஸ் 33 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

    இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில், நியூசிலாந்தின் ஸ்காட் குகெலிஜின் வீசிய இரண்டாவது இன்னிங்சின் 49-வது ஓவரில், ஸ்டோக்ஸ் மூன்றாவது பந்தை ஃபைன் லெக் திசையில் சிக்சருக்கு விளாசினார்.

    இதன் மூலம் தற்போது இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் மெக்கல்லத்தின் நீண்டகால சாதனையை ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.

    ஸ்டோக்ஸ் 33 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    90 டெஸ்ட் போட்டிகளில், ஸ்டோக்ஸ் 109 சிக்ஸர்கள் மற்றும் 36.00 சராசரியில் 12 சதங்கள் மற்றும் 28 அரைசதங்களுடன் மொத்தம் 5,652 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வடிவத்தில் அவரது சிறந்த ஸ்கோர் 258 ஆகும்.

    மறுபுறம், மெக்கல்லம் 101 டெஸ்டில் 107 சிக்ஸர்களை அடித்துள்ளார். அவர் 38.64 சராசரியில் 6,453 ரன்கள் எடுத்தார். அவர் 12 சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள் நீண்ட வடிவத்தில் 302 ரன்களுடன் சிறந்த ஸ்கோரைப் பெற்றுள்ளார்.

    ×