என் மலர்
நீங்கள் தேடியது "கத்தார் ஓபன் டென்னிஸ்"
- கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோஹாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.
- போபண்ணா ஜோடி கத்தார் ஓபன் டென்னிஸ் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
- போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.
தோகா:
கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்தது. இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - கான்ஸ்டன் லெஸ்டினே (பிரான்ஸ்)- போடிக் வான் டி ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து) இணையுடன் மோதியது.
இதில் 6-7 (5-7), 6-4, 10-6 என்ற செட் கணக்கில் போராடி போபண்ணா ஜோடி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்த ஆட்டம் 1 மணி 39 நிமிடங்கள் நீடித்தது. போபண்ணா- எப்டன் ஜோடியாக வென்ற முதல் ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். இவர்களுக்கு ரூ.60 லட்சம் பரிசாக கிடைத்தது.
பெங்களூருவைச் சேர்ந்த 42 வயதான போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.
- மெத்வதேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார்
- சில நேரங்களில் இருவரும் மோசமாக விளையாடியதாக மெத்வதேவ் கூறினார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
தோஹா நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவை, மெத்வதேவ் எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மெத்வதேவ், 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இதுபற்றி மெத்வதேவ் கூறுகையில், 'இன்றைய போட்டி மிகவும் கடினமான போட்டியாக இருந்தது, ஏனெனில் காற்று அதிகம் வீசியது. இன்று கடுமையான போராட்டமாக இருந்தது. சில நேரங்களில் நாங்கள் இருவரும் மோசமாக விளையாடினோம், சில சமயங்களில் இருவரும் நன்றாக விளையாடினோம்' என்றார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீராங்கனை படோசா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் தரவரிசையில் 9-ம் இடம் பிடித்தவரும், ஸ்பெயின் வீராங்கனையுமான பவுலா படோசா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அனிசிமோவா 6-4, 6-3 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் பவுலா படோசா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நோவாக் ஜோகோவிச் மற்றும் மேட்டியோ பெரெட்டினி மோதினர்.
- இதில் முதல் செட்டை போராடி வென்ற மேட்டியோ பெரெட்டினி, 2-வது செட்டை எளிதாக வென்றார்.
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் மற்றும் இத்தாலி வீரரான மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் மோதினர்.
இதில் முதல் செட்டை போராடி வென்ற மேட்டியோ பெரெட்டினி, 2-வது செட்டை எளிதாக வென்றார். இதனால் முதல் சுற்றிலேயே செர்பியா வீரர் ஜோகோவிச் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஜோகோவிச் முதல் சுற்றில் 4-7, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- காலிறுதி ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா (செக்) மோதினர்.
- முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர்.
தோகா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா (செக்) உடன் மோதினார்.
இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை ஜிரி லெஹெக்கா கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 3-6, 6-3 மற்றும் 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
ஜிரி லெஹெக்கா அரையிறுதியில் ஜாக் டிராப்பர் உடன் மோத உள்ளார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் ரூப்லெவ் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-5 என ரூப்லெவ் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை கனடா வீரர் 6-4 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ரூப்லெவ் 7-6 (7-5) என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ரூப்லெவ், பிரிட்டனின் ஜாக் டிராபருடன் மோதுகிறார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்தது.
- ஆண்கள் இரட்டையரில் பிரிட்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்றது.
இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரிட்டனின் லாயிட் கிளாஸ்பூல்-ஜூலியன் கேஷ் ஜோடி, சக நாட்டின் ஜோ சாலிஸ்பெரி-நீல் கப்ஸ்கி ஜோடியுடன் மோதியது.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய லாயிட்-ஜூலியன் ஜோடி 6-3, 6-2 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரரான ரூப்லெவ் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-5 என ரூப்லெவ் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை பிரிட்டன் வீரர் 7-5 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ரூப்லெவ் 6-1 என வென்று சாம்பியன் பட்ட்டம் கைப்பற்றி அசத்தினார்.