search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிகள் நிறைவு"

    • செட்டிநாடு கலைநயத்துடன் கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
    • சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி அகழ் வைப்பகக் கட்டிடத்தில், தொல்பொருட்களை காட்சிப்படு த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர்(பொறுப்பு) மணிவண்ணன் முன்னிலையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பயன்ப டுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது.

    கீழடி அகழாய்வுப் பணியில் கிடைக்கும் தொல்பொருட்களை பார்க்கின்ற வகையில், தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னதாகவே, நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்ப டுத்துவதற்கு ஏதுவாகவும், அந்த பொருட்களை உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொது மக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டிடம் அமைப்பதற்கு தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    இந்த கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது நிறைவுற்றுள்ளது.அகழாய்வு பணிகளின் போது கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    சங்க காலத்தமிழர்களின் பெருமைகளை பறைச்சாற்றும் வகையில் உலகளவில் புகழ் பெறவுள்ள கீழடி அகழ் வைப்பக கட்டி டத்தில் நடைபெற்று வரும் நிறைவுப்பணிகள் தொடர்பாக இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்துப்பணிகளும் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தொல்லியியல் துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு)சிவானந்தம், கீழடி கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்ட (சென்னை) செயற்பொ றியாளர் மணிகண்டன், மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×