search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தியவாணி முத்து"

    • அடையாறு முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
    • அரசியலுக்கு வரும் பெண்களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தவர் சத்தியவாணி முத்து.

    சென்னையில் திமுக மகளிரணி சார்பில் முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. அடையாறு முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அரசியலுக்கு வரும் பெண்களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தவர் சத்தியவாணி முத்து. அவர் திமுகவின் பெண் சிங்கம்.

    அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி ஆணைய தலைவராக சத்தியவாணி முத்துவை, கருணாநிதி பிரந்துரைத்திருந்தார். ஆனால் அப்போது ஆட்சி கலைக்கப்பட்டதால் அது நிறைவேற்றவில்லை.

    போராட்ட குணம், தியாக உணர்வு கொண்டவராக இறுதி மூச்சுவரை திகழ்ந்தவர் சத்தியவாணி முத்து.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×