என் மலர்
நீங்கள் தேடியது "ஆதித்தமிழர் கட்சி"
- ஆதித்தமிழர் கட்சி சார்பில் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் திடீரென சீமானின் 2 உருவ பொம்மைகளை எரித்தனர்.
- பட்டியலின மக்களை சீமான் அவதூறாக பேசியதாக கூறி அவரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
நெல்லை:
ஆதித்தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து நெல்லையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோர்ட்டு எதிரே உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபம் முன்பு ஆதித் தமிழர் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் திடீரென சீமானின் 2 உருவ பொம்மைகளை எரித்தனர்.
உடனடியாக போலீசார் அங்கு சென்று தீயை அணைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். அப்போது அவர்கள், ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் பட்டியலின மக்களை சீமான் அவதூறாக பேசியதாக கூறி அவரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதேபோல் திராவிட தமிழர் கட்சி திருக்குமரன் தலைமையில், நிர்வாகிகள் வண்ணார்பேட்டையில் சீமான் உருவ படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட நிதி செயலாளர் தமிழ்மணி தலைமையில், நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை கைப்பற்றினர்.